மத்திய ஆப்பிரிக்க குடியரசில் முஸ்லிம்களை அடிமைகளாக மாற்றிய கிறிஸ்தவ குழு!

0
பான்குயி: மத்திய ஆப்பிரிக்க குடியரசில் இருந்து ஒரு வருடம் முன்பு கிறிஸ்தவ ஆயுதக் குழுவான ஆண்டிபலாகா கடத்திச் சென்ற ஆடு மேய்ப்பவர்களான 42 முஸ்லிம் ஃபுலானிகள் தற்போதும் அக்குழுவிடம் பிணைக்கைதிகளாக இருப்பதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.இவர்களில் பெரும்பாலோர் பெண்களும், குழந்தைகளுமாவர்.
இதுத்தொடர்பாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’பிணைக்கைதிகளை கிறிஸ்தவ ஆயுதக்குழுவான ஆண்டிபலாகா, கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வருகிறது.அரசும், ஐ.நா அமைதிப்படையும் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிடவேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சாதாரண மக்களை அடிமைகளாக்குவது, குழந்தைகளை கொலைச் செய்வது, பெண்களை பாலியல் அடிமைகளாக்குவது என ஆண்டிபலாகா செய்யும் குற்றங்கள், போர்க்குற்றங்களாகும் என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்சின் ஆப்பிரிக்க ஆய்வாளரான லெவிஸ் முட்கி தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த ஃபுலானிகள், நாடோடி கோத்திரமாவர். சில நாடுகளுக்கு முன்பு 21 ஆடுமேய்ப்பவர்களான முஸ்லிம்களை ஐ.நா அறிவித்திருந்தது.100 பேர் தற்போதும் ஆண்டிபலாகாவின் பிடியில் இருப்பதாகவும் ஐ.நா தெரிவித்தது.2013-ஆம் ஆண்டு ஏற்பட்ட வகுப்பு வன்முறையைத் தொடர்ந்து யாலோக் நகரத்திற்கு அருகே ஃபுலானிகளை கிறிஸ்தவ ஆயுதக்குழுவான ஆண்டிபலாகா கடத்திச் சென்றது.
2013-ஆம் ஆண்டு மத்திய ஆப்பிரிக்க குடியரசில் ஆண்டி பலாகா தீவிரவாதக் குழுவினர் ஆயிரக் கணக்கான முஸ்லிம்களை கொலைச் செய்தனர்.நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மஸ்ஜிதுகளை தகர்த்தனர்.கொடூரமான வன்முறைகளை முஸ்லிம்கள் மீது ஆண்டி பலாகா பிரயோகித்தது.

Comments are closed.