மத்திய பிரதேசத்தில் உளவு வேலைகளில் ஈடுபட்டவர்கள் மூலம் உரி பதான்கோட் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம்

0

மத்திய பிரதேசத்தில் பாகிஸ்தானுக்காக உளவு வேலை பார்த்தார்கள் என்று பாஜக வின் IT பிரிவு ஊழியர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். (பார்க்க செய்தி). இது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணையில் மத்திய பிரதேசம் தவிர்த்து சுமார் 60 மாற்று தொலைபேசி இணைப்பகங்கள் நாட்டின் பிற பகுதிகளில் நடத்தப்பட்டு வரலாம் என்று தெரியவந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் மட்டும் இது போன்று 36 இணைப்பகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உத்திர பிரதேசத்தில் இது போன்று ஒரு தொலைபேசி இணைப்பகத்தை கடந்த மாதம் உத்திர பிரதேச தீவிரவாத தடுப்புப் படை கைது செய்தது.

தற்போது ஹைதராபாத், ஓடிஸா, பீகார், மகாராஷ்டிரா மற்றும் உத்திர பிரதேசத்தில் இது போன்று 60 க்கும் மேற்ப்பட்ட இணைப்பகங்கள் நடைபெற்று வருவதாகவும் அது தொடர்பான தகவல்கள் மத்திய புலனாய்வுத்துறையினருடன் பகிரப்பட்டுள்ளதாகவும் மத்திய பிரதேச காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணையில் குறைந்தபட்சம் ஐந்து துபாய் மற்றும் சீனாவை மையமாக கொண்ட இணைய தளங்களாகும். இவை சர்வதேச அழைப்புகளை VOIP Gatewayக்கள் மூலம் சட்ட விரோதமாக மாற்றம் செய்பவை. அவை பின்னர் தொலைபேசி அழைப்புகளாக மற்றப்பட்டு சீன சிம் பாக்ஸ்களில் போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்டு பொருத்தப்பட்ட நூற்றுக்கணக்கான சிம் மூலமாக செல்போன் அழைப்புகளாக மாற்றப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கருவிகள் புது டில்லியில் வசிக்கும் ஒருவர் மூலமாக பெறப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் ஐந்து இணைய தளங்கள் மூலம் தங்களது செயல்பாடுகளை நடத்தியதாக தெரிகிறது.

மேலும் இந்த இணைய தளங்கள் இவர்களுக்கு  அழைப்பவர்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்ட voip மூலம் சர்வதேச அழைப்புகள் 24 மணி நேரமும் வழங்கும். இந்த அழைப்புகளை விடுப்பவர்களில் பெரும்பாலனவர்கள் பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களின் இந்த நடவடிக்கைகளுக்கு கட்டணம் அனைத்தும் பாகிஸ்தானிகளால் நடத்தப்படும் பண கடத்தல் மூலம் கொடுக்கப்படுகின்றன.

தற்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள் கடந்த மூன்று வருடங்களாக இயங்கி வருகின்றனர் என்பதால் சமீபத்தில் நடத்தப்பட்ட உரி மற்றும் பதான்கோட் தாக்குதல்களில் இவர்களின் பங்கு குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தீவிரவாத தடுப்பு படை தெரிவித்துள்ளது.

Comments are closed.