மத்திய பிரதேசத்தில் பசு குண்டர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க திட்டம்!

0

நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத அமைப்பும், இந்துத்துவா வெறியர்களும் மாட்டிறைச்சி வைத்திருந்தாலோ, சாப்பிட்டாலோ அவர்களது மீது கொடூரத் தாக்குதல் நடத்தி கொலை செய்து வருவது வாடிக்கையாகிவிட்டது. பாஜக ஆட்சியில் இருப்பதால் இந்துத்துவா வெறியர்கள் தாக்குதல்களை வீடியோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.

மேலும், மோடி ஆட்சியில் 266 கொலைவெறி தாக்குதல் சம்பவம் அதிகரித்துள்ளதாகவும், பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இத்தகைய சம்பவங்கள் பத்து மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற தாக்குதல் நடத்தும் வெறியர்களை ஒடுக்கும் வகையில் மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு புதிய சட்டத்தை கொண்டுவர முயற்ச்சித்துள்ளது.

பசுவை பாதுகாக்கிறோம் என்ற பெயரில், மாட்டிறைச்சி வைத்திருந்தாலோ, சாப்பிட்டாலோ அவர்களது மீது கொடூரத் தாக்குதலில் ஈடுபடும் வெறியர்களை கைது செய்து 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை இயற்றவுள்ளது.

Comments are closed.