மத்திய பிரதேசத்தில் மாட்டு வியாபாரிகளை கட்டி வைத்து “கோமாதா கி ஜே” கோஷம் போட வைத்த கொடுமை!

0

மத்திய பிரதேசத்தில் மாடுகளை மாகாராஷ்டிராவுக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்த வியாபாரிகளை கொடுமைப்படுத்தி “கோமாதா கி ஜே” என கோஷம் போட வைத்த கிராம வாசிகள்.

மத்திய பிரதேசம் மாநிலம் கந்த்வா என்ற ஊரிலிருந்து மாடுகளை விற்பனை செய்வதற்காக மகாராஷ்டிராவுக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்த 20க்கும் அதிகமான வியாபாரிகளை கிராமவாசிகள் கயிற்றால் கட்டி, வருசையாக மண்டியிட வைத்து அசிங்கமான வார்த்தைக்ளால் திட்டியுள்ளனர். பின்னர் காதுகளைப்பிடித்துக் கொண்டு “கோமாதா கி ஜே” என கோஷமிட வைத்துள்ளனர். மேலும் அவர்களை 2 கிலோ மீட்டர் தூரம் நடக்க வைத்து ஊர்வலமாகக் கூட்டிச்சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணை நடத்தி, அனுமதி இல்லாமல் மாடுகளை மாகாராஷ்டிராவுக்கு ஏற்றிச்செல்ல முயன்றதற்காக , அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அவர்களை மோசமாக நடத்திய கிராமத்தினர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.

“மாடுகளை ஏற்றிய 21 லாரிகளை பறிமுதல் செய்து, மாடுகளையும் மீட்டுள்ளோம்” என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.