மத்திய பிரதேசம்: அரசு பள்ளிகளில் பாடம் எடுக்க தயாராகவுள்ள ஆர்.எஸ்.எஸ். பள்ளி ஆசிரியர்கள்

0

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நடத்தி வரும் சரஸ்வதி சிசு மந்திர் பள்ளிக்கூடங்களின் ஆசிரியர்கள் விரைவில் மத்திய பிரதேசத்தின் அரசு ஆரம்ப நிலை பள்ளிகளில் பாடம் எடுக்கும் நிலை உருவாகியுள்ளது. தங்களின் பள்ளிகளில் இருந்து ஆயிரம் ஆசிரியர்களை அருகில் உள்ள அரசு பள்ளிகளில் பாடம் எடுப்பதற்கு அனுப்ப தாங்கள் தயாராக உள்ளதாக வித்யா பாரதி அகில் பாரதிய சிக்ஷா சன்ஸ்தான் என்ற ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பு கொடுத்த அறிவிப்பை மத்திய பிரதேச கல்வித்துறை வரவேற்றுள்ளது.
‘நாங்கள் நடத்தி வரும் பல்வேறு சன்ஸ்கார் கேந்த்ராகளில் மாணவர்கள் பள்ளிக்கூட நேரத்திற்க பிறகு இதுவரை பங்கெடுத்து வருகின்றனர். இனி, அரசாங்கத்தின் அனுமதியுடன் பள்ளி நேரங்களிலேயே அவர்களுக்கு பாடம் எடுக்கவுள்ளோம். கணிதம், மொழிப்பாடங்களில் முக்கிய கவனம் செலுத்தினாலும், அனுமதி கிடைக்கும் பட்சத்தில் கலாசார நிகழ்வுகளையும் உட்படுத்தவுள்ளோம்’ என்று அதன் தலைவர் ராம்குமார் பவ்சார் தெரிவித்துள்ளார்.
விரைவாக ஆயிரம் அரசு பள்ளிகளில் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு பள்ளிகளில் மத்திய பிரதேச அரசாங்கம் சூர்ய நமஸ்காரத்தை சமீபத்தில் கட்டாயமாக்கிய நிலையில் தற்போது இத்திட்டத்தை அறிவித்துள்ளது.

Comments are closed.