மத்திய பிரதேசம் தலித் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய பாஜக தொண்டர்

0

மத்திய பிரதேசம் தலித் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய பாஜக தொண்டர்

கடந்த மார்ச் 20 ஆம் தேதி, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துப்பூர்வமான அனுமதி பெற்றே எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பிற நபர்கள் மீது இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் மூத்த காவல்துறை கண்காணிப்பாளரின் அனுமதி பெற்ற பின் தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இன்னும் இது போன்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்படுவதற்கு முன்பாக முதற்கட்ட விசாரணை ஒன்றை நடத்தி உண்மையாகவே இந்த சட்டத்தின் கீழ் குற்றங்கள் நடைபெற்றதா என்று கண்டறிந்த பின்னரே முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தாழ்த்தப்பட்டோருக்கான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்த முயற்ச்சி என்று கூறி அதனை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் போராட்டத்தை தலித் சமூக மக்கள் நடத்தினர். தலித் சமூக மக்களின் இந்த போராட்டத்தை எதிர்த்து சாதிய ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.  அதில் ஒரு பகுதியாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடும் வீடியோ இணையதளத்தில் வைரலானது. இதை  தொடர்ந்து அது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் அந்த நபர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தராஜ சவ்ஹான் என்பது தெரியவந்துள்ளது.

பாஜக வின் இந்த ராஜா சவ்ஹான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தலித் சமூகத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்ததாக பஹுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினரான தேவஷிஷ் ஜராரியா தெரிவித்துளாளர். மேலும் இந்த கொலை மூலம் ராஜா சவ்ஹான் இந்த போராட்டத்தை சாதிய வன்முறையாக மாற்றியுள்ளார் என்றும் அவரது முழு நோக்கமே அதுதான் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ராஜா தன்னுடன் பள்ளியில் ஒன்றாக பயின்றவர் என்ற காரணத்தினால் தன்னால் ராஜாவை அடையாளம் காண முடிந்தது என்று ஜரராரியா தெரிவித்துள்ளார்.

தலித் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது பதிவான அதே வீடியோவில் சிலர் ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை எழுப்பியவாறு செல்வதும் பதிவாகியுள்ளது. வழக்கமாக தலித் மக்கள் நடத்தும் போராட்டங்களில் ஜெய் பீம் என்ற கோஷங்களே எழுப்பப்படும் என்கிற நிலையில், இங்கு ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பப்படுவது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

Comments are closed.