மத்திய பிரதேஷ்: கிறிஸ்துமஸ் கரோல் பாடகர்களின் வாகனத்திற்கு தீவைப்பு

0

மத்திய பிரதேச மாநிலம் சட்னாவில் கிறிஸ்மஸ் வருவதை முன்னிட்டு கரோல் பாடகர்கள் தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தும் வகையில் சாலையில் கரோல் பாட்டுகளை பாடிச் சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் கட்டாய மதமாற்றம் செய்வதாக பஜ்ரங்தள் அமைப்பினர் இவர்கள் மீது புகாரளித்ததை தொடர்ந்து கிறிஸ்துமஸ் கரோல் பாடகர்கள் மற்றும் அவர்களுடன் இருந்த இரு பாதரியார்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களின் நிலையை அறிய காவல்நிலையம் சென்றவர்களின் வாகனமும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறை கருத்து தெரிவிக்கையில், தங்களுக்கு கரோல் பாடகர்கள் சட்னா பகுதியில் மதமாற்றம் செய்வதாக அழைப்பு ஒன்று வந்ததாகவும் அதனை தொடர்ந்து அவர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று 30 பாடகர்கள் மற்றும் இரு பாதரியாரை கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். இவர்களின் நிலையை அறியச் சென்ற மேலும் எட்டு பாதரியார்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரையும் காவல்துறையினர் நள்ளிரவு வரை காவல்நிலையத்தில் கட்டாயமாக இருக்கச் செய்துள்ளனர். இவர்கள் வந்த வாகனம் தான் கயவர்களால் திட்டு கொளுத்தப்பட்டுள்ளது.

வாகனத்தை தீயிட்டு கொளுத்திய அடையாளம் தெரியாத நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Comments are closed.