மத்திய மக்கள் பட்ஜெட்…?

0

மத்திய மக்கள் பட்ஜெட்…?

ஐந்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியின் கடைசி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த நிலையில் அமைச்சர் பியூஷ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது ஏழை, நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் எனப் பிரச்சாரப்படுத்தப்படுகிறது. ஆனால், இது இடைக்கால பட்ஜெட் என்பதனை நம்மில் பலர் நினைவில் கொள்ளவில்லை. ‘இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ததில் நாடாளுமன்ற மரபுகளை மத்திய பா.ஜ.க அரசு தகர்த்துள்ளது. ஆட்சிக் காலம் நிறைவடையும் நேரத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார மேடையாக பட்ஜெட் தாக்கல் நிகழ்வினை பா.ஜ.க. மாற்றியுள்ளது’ என்பது நடுநிலையாளர்கள் கருத்து.

சரி… இந்த பட்ஜெட் கடந்த காலங்களை விட சிறந்த பட்ஜெட்டா, நாட்டின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட பட்ஜெட்டா என்பது குறித்தும் ஆராயவேண்டியது அவசியமாகிறது.

வருவாய் என்று எடுத்துக் கொண்டோமானால் இதற்கு முன்னர் இருந்த காலகட்டங்களில் பல்வேறு வகையான வருவாய்கள் இருந்த நிலையில் தற்போது வெறும் ஐந்து வகையான வருவாய் நிலையே பிரதானமாகவுள்ளது. அதில் 29.8 சதவிகிதம் கார்ப்பரேட்டுகள் மீதான வரிவிதிப்பு மூலமாகவும், 29.1 சதவிகிதம் ஜிஎஸ்டி மூலமாகவும், 23.5 சதவிகிதம் தனிநபர் வருமானவரி மூலமாகவும், 11.5 சதவிகிதம் கலால் (Excise) மூலமாகவும், சுங்கம் (Customs) மூலமாக 5.8 சதவிகிதம் கிடைக்கிறது.

முதலில் சேவை வரியை எடுத்துக் கொள்வோம். முன்பு சேவை வரியாகவும் தற்பொழுது ஜிஎஸ்டி ஆகவும் இருக்கும் சேவை வரி 2009-10ல் கிட்டத்தட்ட 10 சதவிகிதமாக இருந்தது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த காலகட்டத்தில் அது 13 சதவிகிதத்திற்கு உட்பட்டு இருந்தது. இது தற்பொழுது உயர்ந்து 14.39 சதவிகிதமாக உள்ளது. அதிக வரி செலுத்துவது நமது ‘கடமையா’கிறது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.