மத, சாதி வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கும் என்.ஆர்.சி., என்.பி.ஆர்.!

0

மத, சாதி வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கும் என்.ஆர்.சி., என்.பி.ஆர்.!

டெல்லி கலவரம், நீதிபதி முரளிதர் பணியிட மாற்றம், சி.ஏ.ஏ., கஷ்மீர் விவகாரம், இடஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்ட சமகால நிகழ்வுகள் குறித்து உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்களுடன் உரையாடினோம்.

டெல்லி கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்திய நீதிபதி முரளிதர் பணியிடமாற்றம் செய்யப்பட்டது குறித்து உங்கள் கருத்து?

மிகக் கொடூரமான டெல்லி கலவரத்தில் 50க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதில் மிகப் பெரும்பான்மையாக இஸ்லாமிய சமூகத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் முஸ்லிம்களின் மசூதிகள் (பள்ளிவாசல்) இடிக்கப்படுகிறது. அதன் மேல் காவிக் கொடி ஏற்றப்படுகிறது. பள்ளிக்கூடங்கள் தீயிட்டு கொளுத்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற விரைந்த ஆம்புலன்ஸ் வாகனம் தடுத்து நிறுத்தப்படுகிறது. இது ஒருபுறமிருக்க வன்முறையில் காவலர்களும் ஈடுபட்டதாக செய்திகளும், மத, சாதி வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கும் என்.ஆர்.சி., என்.பி.ஆர்.! காணொளிகளும் வெளிவந்தன. இச்சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்ய மறுக்கப்படுகிறது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதை ஆறு வார காலம் கிடப்பில் போடுகிறார் ஒரு நீதிபதி. உச்சநீதிமன்றம் உடனே விசாரிக்க வலியுறுத்துகிறது. குற்றச்செயல் நடைபெற்றால் அது குறித்து புலன் விசாரணை செய்ய வேண்டும். புலன் விசாரணை செய்வதற்கு அடிப்படை, முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட வேண்டும். எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய  அரசு மறுக்கிறது என்றால், குற்றம் நடந்தாலும் விசாரணை வேண்டாம் என்று அரசு கருத்து கொள்வதாக பொருள். இச்சம்பவத்தில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டாம் என அரசு பிடிவாதமாக இருக்கிறது என்றால் அது பாசிச அரசாகத் தான் இருக்க முடியும்.

கலவர சமயத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க காவல்துறையை இயங்க வைத்தும் ஆம்புலன்ஸ் தடுக்கப்பட்ட சமயத்தில் முதலுதவி சேவையை விரைந்து வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டார் நீதிபதி முரளிதர்.  வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர நீதிபதி முரளிதர் உத்தரவுதான் முக்கியமாக அனைவராலும் பாராட்டப்பட்டது. நீதிபதியை மாற்றிய முறை அனைவரின் கண்டனத்தையும் பெற்றுள்ளது. இரவு 12 மணிக்கு மாற்ற உத்தரவு தர வேண்டிய அவசியமில்லை. அடுத்த நாள் காலை கொடுத்து இருக்கலாம். இரவு நேரத்தில் ஏன் இந்த அவசரம் என்றும், மோசமான சூழ்நிலையில் பணியிட மாற்றம் எதற்கு என்ற கேள்வியும் எழுகிறது.

இந்தியாவின் முக்கியமான பகுதி தலைநகரம் டெல்லி. அங்குள்ள உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்தால் முக்கியமான வழக்குகள் வரக்கூடும். அதில் தீர்ப்பு வழங்கக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையா என்ற சந்தேகம் எழுகிறது.

நீதிபதி முரளிதருடைய பிரிவு உபசார விழாவில் அதிக எண்ணிக்கையில் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய இறுதி உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

பணியிடமாற்ற உத்தரவு கிடைத்தவுடன் ‘பெற்றுக்கொண்டேன்’ என்று கூறினார். ‘பெற்றுக் கொண்டேன்’ என்ற வார்த்தையின் பொருள் இப்படியாக இருக்கலாம். அதாவது பணியிட மாற்றம் தொடர்பாக மாற்று கருத்து, ஆட்சேபனை இருக்கிறதா அல்லது ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா என்று கொலிஜியத்தில் கேட்டிருக்கலாம். அந்த சமயம் மாட்டேன் என்று சொல்லி இருப்பின் மேகாலயா, சிக்கிம் போன்ற பகுதிகளுக்கு மாற்றப்படலாம். ஆகவே, பெற்றுக் கொண்டேன் என்பதன் மூலம் பஞ்சாப் – ஹரியானா நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறார்.

சி.ஏ.ஏ., கஷ்மீர் விவகாரத்தில் நம்பிக்கையின் கடைசி புகலிடமான நீதித்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கருத்து நிலவுகிறதே?

சி.ஏ.ஏ. தொடர்பாக இப்போதைக்கு விசாரிக்கப் போவதில்லை என்றும் சபரிமலை வழக்கின் தீர்ப்புக்கு பிறகுதான் இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார். சி.ஏ.ஏ. வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன்னதாக வந்தால் மட்டுமே பிரயோஜனம். இல்லையென்றால் எந்த பயனுமில்லை. நாட்டில் அது விபரீதமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.

நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் தொடரும் சூழலில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு கொடுப்பதற்கு மறுத்துவிட்டது. இதேபோன்று மிகப் பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்றதால் மண்டல் எதிர்ப்பு வழக்கில் தடை உத்தரவு வழங்கிய உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் கொடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளது. நீதிமன்றம் தடை விதித்து இருந்தால் தற்போதைய சூழ்நிலையில் அமைதி நிலவுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும்.

சி.ஏ.ஏ., கஷ்மீர் விவகாரங்களில் எந்த காலக்கெடுவும் உச்சநீதிமன்றம் சொல்லவில்லை. சிறையில் இருப்பவர்கள் குறித்தும் எதுவும் பேசவில்லை. தொலைதொடர்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கஷ்மீர் நிர்வாகம் முடிவு எடுக்கும் என்றனர்.

உச்சநீதிமன்றம் மக்களுக்கு ஆதரவாக இருக்குமா என்ற கேள்வி எமர்ஜென்சி காலத்தை நினைவூட்டுவதாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோக்கூர் உட்பட அனைவரும் கூறுகின்றனர். ஏனென்றால் அந்த சமயத்தில் அனைத்து அடிப்படை உரிமைகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் எதையும் விசாரிக்க மாட்டேன் என்றது. அதே போன்றதொரு நிலை தற்போதும் தொடர்கிறதா என்ற ஐயப்பாடு எழுகிறது.

சிஏஏ விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?

பல மாநிலங்களில் என்.பி.ஆர்., என்.ஆர்.சி., சி.ஏ.ஏ சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அதே முறையை தமிழக அரசும் கையாள வேண்டும் என்பது என் கருத்து. என்.பி.ஆர்.தான் என்.ஆர்.சி.க்கான முதல்படி. என்.பி.ஆர். கணக்கெடுக்கப்பட்டால் நிச்சயமாக என்.ஆர்.சி. கொண்டுவரப்படும். என்.பி.ஆர். கைவிடப்பட்டால் என்.ஆர்.சி.யை அமல்படுத்த முடியாது. என்.பி.ஆர். வேறு சென்சஸ் வேறு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சென்செஸ் சட்டத்தின் கீழ் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடதப்படுகிறது. ஆனால் 2003ல் உருவாக்கப்பட்ட விதிகள் மூலம் என்.பி.ஆர். மேற்கொள்ளப்படுகிறது. இந்த விதிகள் நாடாளுமன்றம் இயற்றியது அல்ல; அரசு நிர்வாகம் இயற்றியது. அதில்தான் என்.பி.ஆர்.வும்  என்.ஆர்.சி.யும் இருக்கிறது. பல மாநிலங்களும் புறக்கணித்துள்ளன, தமிழக அரசும் புறக்கணிக்க வேண்டும்.

என்.பி.ஆர்.யும் என்.ஆர்.சி.யும் நடைமுறைக்கு வந்தால் இஸ்லாமியர்கள் மட்டும் பாதிக்கப்பட போவதில்லை. இந்துக்களும் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக இந்துக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். அஸ்ஸாம் மாநிலத்தில் 19 இலட்சம் பேர் நாடற்றவர்களாக ஆனதில் 12 இலட்சம் பேர் இந்துக்கள். இதை புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இந்துக்களில் ஏழைகள், தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள், பின்தங்கிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஏனெனில் இந்த மக்களிடம் அரசு கேட்கும் ஆவணங்கள் இருக்கப் போவதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. வசதி படைத்தவர்கள் வழக்குகளின் மூலம் ஓரளவு தள்ளிப் போட வாய்ப்பு இருக்கிறது. இந்த நடவடிக்கை மத, சாதி வித்தியாசமின்றி கீழ்மட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஏழைகளையும் கடுமையாக பாதிக்கும். விடுதலை இயக்கம் போன்று இஸ்லாமியர்கள் தலைமை தாங்கி போராடுகிறார்கள். இந்த சட்டத்தினால் இஸ்லாமியர்களுக்கு சிரமம் இருக்கிறதோ என்று இந்துக்கள் நினைக்கிறார்கள். அப்படியல்ல.. இது அனைவருக்குமான பிரச்சனை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

சி.ஏ.ஏ. சட்டத்தின் மூலம் குடியுரிமை கொடுப்பதாக சொல்வதெல்லாம் நடக்காத விஷயம். தற்போது அஸ்ஸாமில் 12 இலட்சம் இந்துக்கள் நாடற்றவர்களாக இருக்கிறார்கள். இதில் யாரை இந்திய குடிமகனாக அங்கீகரிக்க முடியும்? பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து வந்ததாக நிரூபிக்க வேண்டும். ஒரு கிராமத்தில் பழங்குடியின தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள், பின்தங்கிய மக்கள் பாகிஸ்தானிலிருந்து வந்ததாக நிரூபிக்க முடியுமா? இந்த உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பேட்டி: காதர் க்[/groups_member] … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.