மத சுதந்திரம் மற்றும் தனியார் சட்டங்களை உச்ச நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

0

மத சுதந்திரம் மற்றும் தனியார் சட்டங்களை உச்ச நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு (NEC) கூட்டம் 2018 அக்டோபர் 06, 07, 08 ஆகிய தேதிகளில் புது டெல்லியிலுள்ள தலைமையகத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட பத்திரிகை அறிக்கையில், கடந்த சில மாதங்களாக உச்ச நீதிமன்றத்திலிருந்து தொடர்ச்சியாக வெளிவரும் தாராளவாத மற்றும் முற்போக்கு தீர்ப்புகள் மத சிறுபான்மையினர் மத்தியில் இது பொது சிவில் சட்டத்திற்கு வழி வகுக்கக்கூடும் என்கின்ற பயத்தையே அதிகப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

அகிலா ஹாதியாவாக மதம் மாறியதை தொடர்ந்து ஒரு முஸ்லிமுடன் நடைபெற்ற திருமண விவகாரம் குறித்து இந்தியாவின் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் மாபெரும் தீர்ப்பை வழங்கியது. கடந்த 9 ஏப்ரல் 2018 அன்று ஹாதியாவின் திருமணத்தை ரத்து செய்து அறிவித்த கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒதுக்கி வைத்து விட்டு “ஒரு நபரை திருமணம் செய்வது அரசியலமைப்பு சட்டம் பிரிவு 21 (வாழ்வு மற்றும் சுதந்திரத்திற்கான உரிமை) அடிப்படையில் தனிப்பட்ட ஒருவரின் உரிமையாகும்” என்று உச்ச நீதிமன்றம் கூறியது. சாதாரண குடிமக்களின் அடிப்படை உரிமைகளை தடுக்க முயற்சி செய்யும் சக்திவாய்ந்த வலதுசாரி சக்திகளுக்கு எதிராக குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காக வழங்கப்பட்ட இத்தகைய தீர்ப்பு தேசத்தின் சமீபத்திய வரலாற்றில் நிகழ்ந்த மிக முக்கியமான நீதித்துறையின் தலையீடுகளில் ஒன்றாகும். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Goto Index

Comments are closed.