மத வன்முறைகள் இருந்தால் நாடு வளர்ச்சியடையாது: மோடி ஆட்சிக்கு எதிராக தொழிலதிபர்கள்!

0

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வளர்ந்து வருவதா மோடியும் அவரது அமைச்சர்களும் கூறிவந்தாலும் வளர்ச்சி விகிதம் நாளுக்கு நாள் குறைந்துவருவதாக சமீபத்தில் வந்த ஆய்வுகள் கூறுகிறது.  மேலும் பாஜக ஆட்சியில் இந்துத்துவா கும்பல் நடத்தும் தாக்குதல் அதிகரித்து விட்டது. 

சகிப்பின்மையின் வெளிப்பாடே இதுபோன்ற தாக்குதலுக்கு காரணம் என அரசியல் கட்சியினர், ஜனநாயக அமைப்பினர் கூறிவந்த நிலையில் தற்போது தொழிலதிபர்களும், முதலீட்டார்களும் அதே கருத்தே முன்வைத்ததுள்ளனர்.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இதுதொடர்பாக ஆதி கோத்ரேஜ் கூறியதாவத: “பாஜக ஆட்சியில் நாட்டில் நடக்கும் சம்பவமும் எதுவும் நல்லதாக இல்லை. தற்போது நாட்டில் நிலவும் பெரிய அளவிலான வறுமை, அதிகரிக்கும் சகிப்பின்மை, உறுதியற்ற சமூகச்சூழல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கலாச்சாராக் காவலர்கள் என்ற பெயரில் அவர்கள் எடுக்கும் நடவடிக்கை, சாதி மற்றும் மதம் சார்ந்த வன்முறைகள் நாட்டில் அதிகரித்துவிட்டன.

வேலை வாய்ப்பின்மை 6.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் மிக அதிகம். தண்ணீர்ப் பஞ்சம், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் அதிகளவிலான பிளாஸ்டிக் பயன்பாடு, மருத்துவ வசதிகள் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளை தீர்வுக்குள் கொண்டுவந்தாதான் ஆரோக்கியமான சூழலில் மக்கள் வாழ்க்கை நடத்த முடியும்” என்றார்.

ஆதி கோத்ரேஜ் இந்த கருத்துக்கு முதலீட்டாளர்கள், நிறுவனத் தலைவர்கள், தொழிலதிபர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Comments are closed.