மனதில் நிழலாடும் பண்பாளர் பி.எஸ். அப்துர் ரஹ்மான்!

0
தமது தொலைநோக்கு சிந்தனையால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு மிகப் பெரிய காரணகர்த்தாவாக திகழ்ந்தவர் மரியாதைக்குரிய பி.எஸ்.ஏ. அவர்கள்.

கடைநிலை ஊழியரையும் பெயர் சொல்லி அழைக்கும் நினைவாற்றலுக்குரியவர். அவரது முயற்சியால் பல்வேறு கல்வித்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு ஏழை, எளிய மாணவர்கள் இலகுவாக கல்வி கற்று உயர்படிப்பு முடித்ததும் அவர்களுக்கு தமது தொழில் நிறுவனங்களில் உடனடி வேலை வாய்ப்பும் வழங்கிய பண்பாளர்.

பி.எஸ்.ஏ. என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களால் அன்புடன் அழைக்கப் பெற்ற இந்த மாமனிதர் மனதில் நிழலாடும் பண்பாளர் என்பது சிறப்புக்குரிய விடயமாகும்.

அன்னாரின் இழப்பு ஒரு சமுதாயத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பேரிழப்பாகும்.

அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், ஈ.டி.ஏ. கிரஸண்ட் குழுமத்தினருக்கும் ஸப்ரன் ஜமீல் என்னும் அழகிய பொறுமையை கொடுக்கவும், பெரியவர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் அவர்களின் பிழைகளைப் பொறுத்தருளி அவர்களின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை சிறப்பாக்கி வைக்கவும் எல்லாம் வல்ல ரஹ்மானை இருகரமேந்தி வேண்டுகிறேன்.

கீழை ஜஹாங்கீர் அரூஸி
தலைவர், இந்தியன் சோஷியல் ஃபோரம் (ISF)
சவூதி அரேபியா தம்மாம் மண்டல தமிழ் பிரிவு

Comments are closed.