மனிதர்களை உலுக்கிய கிறைஸ்ட்சர்ச் தாக்குதல்கள்

0

மனிதர்களை உலுக்கிய கிறைஸ்ட்சர்ச் தாக்குதல்கள்

நியூஸிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் நகரில் அமைந்துள்ள இரண்டு பள்ளிவாசல்கள் மீது மார்ச் 15 அன்று நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் உலக மக்களை உலுக்கியது. கிறைஸ்ட்சர்ச் நகரில் அமைந்துள்ள அந்நூர் லிண்வுட் பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்கு தயாராக இருந்த முஸ்லிம்கள் மீது இனவெறி கொண்ட பயங்கரவாதி ஒருவன் நடத்திய தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டனர். முதலில் அந்நூர் பள்ளிவாசலில் தனது தாக்குதலை நடத்திய தீவிர இனவாத சிந்தனை கொண்ட பிரண்டன் டேரண்ட் அடுத்து லிண்வுட் பள்ளிவாசலுக்கு சென்று துப்பாக்கி சூட்டை நடத்தினான். நடத்தப்பட்ட இந்த மனித தன்மையற்ற தாக்குதலில் மூன்று வயது குழந்தை முதல் 71 வயது முதியவர் வரை கொல்லப்பட்டனர்.

அந்நூர் பள்ளிவாசலின் நுழைவாயிலில் ‘ஹலோ பிரதர்’ என தன்னை விழித்த நபரை எவ்வித சலனமும் இன்றி சுட்டுக் கொன்று தனது வெறியாட்டத்தை தொடங்கிய டேரண்ட், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என எவ்வித வித்தியாசமுமின்றி அனைவரையும் தனது தோட்டாக்களுக்கு இரையாக்கினான். இந்த கொடூர தாக்குதல்களை தனது தலையில் மாட்டிய கேமரா மூலம் தனது சமூக வலைதள பக்கத்தில் நேரடியாக டேரண்ட் ஒளிபரப்பியது வெறுப்பின் விதைகள் விதைக்கப்பட்டதன் விளைவை காட்டின. பள்ளிவாசலின் ஒவ்வொரு பகுதிக்கும் மக்களை தேடிச் சென்று கொலை செய்தது, ஆயுதங்களை பதற்றமின்றி மாற்றி மாற்றி பயன்படுத்தியது என டேரண்டின் செய்கைகளை கண்டவர்கள் இயல்பு நிலைக்கு வர சில மணிநேரங்கள் ஆகியிருக்கும் என்பதுதான் உண்மை.

தாக்குதல் நடத்தியவனை தடுத்து நிறுத்த முற்பட்டவர்களும் கொல்லப்பட்டனர். லிண்வுட் பள்ளிவாசலில் வைத்து அப்துல் அஜீஸ் என்பவர் தடுத்து நிறுத்தி துரத்தியதுடன் டேரண்டின் வெறியாட்டம் முடிவுக்கு வந்தது. காரில் தப்பிச் சென்றவனை காவல்துறையினர் விரைவாக விரட்டிப் பிடித்தனர். கொலைகளை நடத்திய டேரண்ட்வுடன் வேறு சிலரையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கொலைகாரன் டேரண்ட் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவன். மேற்கத்திய நாடுகளின் கொலைக்களமாக மாற்றப்பட்ட ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளின் அவல வாழ்க்கையில் இருந்து தப்பி நிம்மதியை தேடி வந்த அகதிகளும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து படிப்பிற்கும் வேலைக்கும் சென்றவர்களும் எதற்காக கொல்லப்பட்டோம் என்பதை அறியாமலேயே தங்கள் உயிர்களை இழந்தனர். இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த தலா பத்து நபர்கள் இத்தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். அந்நூர் பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வர தயாராகிக் கொண்டிருந்த வங்கதேச கிரிக்கெட் அணியினர் நூலிழையில் உயிர் தப்பினர்.

கொலை செய்தவனுக்கும் கொலை செய்யப்பட்டவர்களுக்கும் எவ்வித தனிப்பட்ட பகையும் இல்லை. யாருக்கும் எவ்வித தீங்கும் இழைக்காமல் தங்களை படைத்தவனை வணங்குவதற்காக அமைதியாக பள்ளிவாசலில் குழுமியிருந்தவர்கள் மீது டேரண்ட் எதற்கு தாக்குதல் நடத்த வேண்டும்? அல்லாஹ் குர்ஆனில் ‘சொல்வது போல், மிகைத்தோனும் புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களை பழிவாங்கவில்லை’ (அல்குர்ஆன் 85:-8) என்பதையன்றி வேறேதும் காரணங்கள் இருக்குமா?

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Leave A Reply