மனைவிக்காக விமானத்தை கடத்திய எகிப்தியர்

0

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில் இருந்து தலைநகர் கெய்ரோவிற்கு 55 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் சென்ற விமானத்தை இப்ராஹீம் ஷமஹா என்பவர் சிப்ரஸ் நாட்டிற்கு கடத்திச் சென்றுள்ளார்.

விமான பயணத்தின் போது விமானி அறைக்கு சென்ற ஷமஹா விமானியிடம் தான் வெடிகுண்டு பெல்ட் அணிந்திருப்பதாகவும், விமானத்தை சிப்ரஸ் நாட்டிற்கு திருப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதனால் அச்சமடைந்த விமானி சிப்ரஸ் நாட்டின் லர்னாக்கா விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினார். அங்கு அந்த விமானத்தில் பயணித்த பெண்கள் குழந்தைகள் உட்பட 50 பேரை அவர் விடுவித்தார். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்த 5 பேர்களுடன் விமான ஊழியர்களையும் பிணைய கைதியாக தன்னுடன் வைத்துக்கொண்டு அரபு மொழியில் எழுதப்பட்ட நோட்டீஸ்களை விமானத்திற்கு வெளியே வீசியுள்ளார்.

அந்த நோட்டீசில் தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவி சிப்ரசில் வசிப்பதாகவும், அவரை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். விமானம் கடத்தப்பட்டதை அடுத்து தீவிரவாத செயல் என்று எண்ணி பரபரப்பில் ஆழ்ந்த அதிகாரிகள் இந்த நோட்டீசை விமான கடத்தலில் ஈடுபட்டவர் தீவிரவாதி அல்ல என்று அறிவித்துள்ளனர். இதனை சிப்ரஸ் அதிபர் நிக்கோஸ் தெரிவித்துள்ளார்.

Comments are closed.