மனைவியை சுட்டுக் கொலை செய்த பாஜக தலைவர்

0

கடந்த வெள்ளிக்கிழமை மீரட் பகுதி பாஜக தலைவரான குல்தீப் தோமர், அவருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட தகராறில் அவரது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், வெள்ளி இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த தோமருக்கும் அவரது மனைவி பூனமிற்கும் இடையே மோதல் ஏற்ப்பட்டுள்ளது என்றும் அந்த மோதலின் போது தனது பேரில் உரிமம் பெற்ற துப்பாக்கியால் தனது மனைவியின் தலையில் அவர் சுட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதில் படுகாயமடைந்த பூனம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த நிகழ்வை அடுத்து தற்போது தோமர் தலைமறைவாக உள்ளதாக தெரியவருகிறது. அவரின் மேல் பூனமின் குடும்பத்தினர் புகாரளித்து முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட பூனமின் சகோதரர் பிரவீன் புந்திர், முன்னதாக தோமர் தனது சகோதரியை கொலை செய்துவிடுவதாக பல முறை மிரட்டியுள்ளார் என்றும் பல ஆண்டுகளாக தன் சகோதரியை அவர் மிகவும் மோசமாக நடத்தி வந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். தொடற்சியாக தோமரால் தாக்கப்பட்ட தனது சகோதரி அடிக்கடி தங்கள் வீட்டிற்கு வருவார் என்றும் குடி போதைக்கு அடிமையான தோமர் பல முறை துப்பாக்கியை காட்டி தன்னை மிரட்டுவதால் தான் கொலை செய்யப்படலாம் என்று தன் சகோதரி அஞ்சியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த தோமரின் உறவினர்கள், இது ஒரு விபத்து என்றும் தோமர் தனது துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி சுட்டு பூனம் மீது குண்டு பாய்ந்தது என்று கூறியுள்ளனர்.

தங்கள் கட்சியை சேர்ந்தவர் இப்படி ஒரு செயலை செய்ததை அறிந்த பாஜக அவர் கட்சியின் எந்த ஒரு பொறுப்பிலும் இல்லை என்று கூறியுள்ளது. மேலும் அவர் வெறும் ஒரு தொண்டர் தான் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. அனால் மீரட்டில் நடைபெற்ற பாஜக கூடங்களில் தோமரை பரவலாக காண முடியும் என்றும் அப்பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் தோமரின் படங்கள் நிறைந்திருக்கும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பாஜக வின் தலைவர்களாக சங்கீத் சோம, சுரேஷ் ரானா மற்றும் மாநில பாஜக தலைவர் கேஷவ் பிரசாத் மெளரியா ஆயிரோக்க்கு மிக நெருக்கமாக அவர் இருப்பது போன்ற பல புகைப்படங்களும் காணக் கிடைகின்றன. கூடுதலாக தற்போது செயலிழக்கம் செய்யப்பட்டுள்ள தோமரின் ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் தன்னை பாஜக வின் இளைஞர் பிரிவான BJYM இன் மாநில கமிட்டி உறுப்பினர் என்று குறிப்பிட்டுள்ளாதக செய்திகள் வெளியாகியுள்ளன.

Comments are closed.