மன உறுதி

0

மன உறுதி

“அன்றியும், நான் என் மனதைப் பாவத்தை விட்டும் பரிசுத்தமாக்கி விட்டதாகவும் (கூற) இல்லை, ஏனெனில் மன இச்சையானது தீமையைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது, – என் இறைவன் அருள்புரிந்தாலன்றி; நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும், அருளாளனாகவும் இருக்கின்றான்” (என்று கூறினார்). (அல்குர்ஆன் 12:53)

யூசுஃப் நபி(அலை) அவர்களை அரசனின் மனைவி அவரை வசீகரித்து தீய வழிக்கு தூண்டியபோது யூசுஃப் நபி(அலை) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். இந்த பதிலை அல்லாஹ் விரும்பியதால் அதனை அனைத்து மனிதர்களுக்கும் அறிவுறுத்தலாக வழங்கியுள்ளான்.

மனிதனை தீமையை நோக்கி வழி நடத்துவதற்கான கட்டளையிடும் ஆற்றல் மனதிற்கு உள்ளது. ஆகையால் மனதை சுத்திகரிக்க போதிய கவனம் செலுத்தவேண்டும்.

மனதை அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டதாக, அவனது அருட்கொடைகளை பெறுவதற்கு தகுதியானதாக ஆக்கிக்கொண்டு தீமையை நோக்கி செல்லும் அதன் உணர்ச்சி வேகத்தை தடுத்து நிறுத்தி மனதை சமநிலைப்படுத்த வேண்டும். போதுமான வணக்க வழிபாடுகள் மூலமாகவும், குர்ஆனிய சிந்தனைகளின் அடிப்படையில் வாழ்க்கையை ஒழுங்குப்படுத்துவதன் மூலமாகவும் அல்லாஹ்வை நெருங்கி அவனது கருணையின் நிழலில் செயல்பட வேண்டும்.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.