மயான அமைதியில் கஷ்மீர்!

0

மயான அமைதியில் கஷ்மீர்!

விமான பயணத்தில் விமானம் ஏறும் போதும் தரையிறங்கும் போதும் ஜன்னல்களின் திரைகளை திறந்து வைக்குமாறு விமான சிப்பந்திகள் கூறுவர். ஆனால் தற்போது ஜம்மு கஷ்மீரின் ஸ்ரீநகருக்கு செல்லும் விமானங்களில் விமானம் தரையிறங்கும் போது ஜன்னல் திரைகளை மூடுமாறு எதிர்மறை அறிவிப்பு கொடுக்கப்படுகிறது. அங்கு செல்லும் பயணிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இது முதலில் சற்று வியப்பை கொடுத்தாலும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள கஷ்மீரின் நிலையை தங்கள் கண்களில் இருந்து மறைப்பதற்கே இந்த ஏற்பாடு என்பதை விரைவாக புரிந்து கொள்கின்றனர். பாதுகாப்பு படைகளை குவித்து தொலைத்தொடர்புகளை துண்டித்து ஜம்மு கஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்துகளை ரத்து செய்த பாரதிய ஜனதா அரசாங்கம் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆகஸ்ட் 5 அன்று பிரித்தது. (விரிவான தகவல்களுக்கு புதிய விடியல் ஆகஸ்ட் 16- – 31, 2019 இதழை காணவும்). கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மூன்று வாரங்கள் கழிந்துள்ள நிலையில் இயல்பு நிலைக்கு கஷ்மீர் திரும்புகிறது என்று மோடி அரசாங்கம் கூறினாலும் அங்கு எதுவும் இயல்பாக இல்லை என்பதுதான் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.