மரண தண்டனைக்கு எதிராக திரிபுரா சட்டப்பேரவை தீர்மானம்

0

மரண தண்டனைக்கு எதிராக திரிபுரா சட்டப்பேரவை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதற்கான கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள அம்மாநிலம் மோசமான குற்றங்களை நிகழ்த்தியவர்களுக்கு மரணிக்கும் வரை சிறை தண்டனை வழங்கலாம் என்றும் கூறியுள்ளது.
இந்திய குற்றவியல் சட்டம் 302ன் கீழ் நீதிமன்றங்கள் மரண தண்டனை விதித்து வருகின்றன. இதில் மத்திய அரசாங்கம் தேவையான மாற்றங்களை கொண்டு வந்து மோசமான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரணிக்கும் வரை சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்று தனிநபர் மசோதாவை கொண்டு வந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜிதேந்திர சர்கார் தெரிவித்தார்.
மற்றவர்கள் உயிர் வாழும் உரிமையை குற்றம் இழைத்தவர் பறித்துவிட்டார் என்ற அடிப்படையிலேயே மரண தண்டனை கொடுக்கப்படுகிறது. ஆனால் ஒருவித பழிவாங்கும் போக்கு நடைமுறையில் இருப்பதால் என்னால் இதை ஆதரிக்க முடியாது என்று முதல்வர் மாணிக் சர்கார் தெரிவித்தார்.
இந்த தீர்மானம் பின்னர் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Comments are closed.