மரண தண்டனைக்கு கர்ளாவி கண்டனம்

0

எகிப்து நீதிமன்றம் தனக்கு விதித்த மரணத்தண்டனைக்கு எவ்வித மதிப்பும் இல்லை என்றும், தான் அதனை பொருட்படுத்தவில்லை என்றும் உலக முஸ்லிம் அறிஞர்கள் அவையின் தலைவரான டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி தெரிவித்துள்ளார்.
2011 ஜனவரி மாதம் எகிப்தின் நத்ருன் சிறையை உடைத்து கைதிகளை விடுவித்தது தொடர்பான வழக்கில் எகிப்தின் முன்னாள் அதிபர் முஹம்மது முர்ஸி, அறிஞர் யூசுஃப் அல் கர்ளாவி ஆகியோர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு சில தினங்களுக்கு முன்னால் எகிப்து நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. நீதிமன்றத்தின் கேலிக்குரிய இத்தீர்ப்பை நடைமுறைப்படுத்த சாத்தியமில்லை. சம்பவம் நடைபெற்ற போது தான் கத்தாரில் இருந்ததை அனைவரும் அறிவர் என்று கூறிய கர்ளாவி 85 வயது முதியவரால் எப்படி சிறையை உடைத்து அதிலுள்ளவர்களை விடுவிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதை மறுத்துள்ள கர்ளாவி இது போன்ற தீர்ப்புகளை தான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்றும் கூறினார். எகிப்தை சேர்ந்த அறிஞரான யூசுஃப் அல் கர்ளாவி தற்போது கத்தாரில் வசித்து வருகிறார்.

Comments are closed.