மலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி புரோஹித் பிணை மனு: NIA பதிலை கேட்கும் உயர்நீதிமன்றம்

0

2008 மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான புரோஹித் பிணை மனுவை விசாரணை நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து உயர்நீதி மன்றத்தில் பிணை மனுவை தாக்கல் செய்துள்ளார். இவரின் இந்த மனுவிற்கு NIA வின் பதிலை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது.

நீதிபதி நரேஷ் படில் தலைமையிலான பென்ச் இதன் விசாரணையை நவம்பர் மாதம் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. இத்துடன் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு குற்றவாளியான சாத்வி பிரக்யா சிங்கின் பிணை மனுவும் விசாரிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் இவ்வழக்குக்கு தொடர்புடைய தீவிரவாத தடுப்புப் படை சமர்பித்த ஆவணங்கள் மற்றும் NIA வின் விசாரணை தொடர்பான ஆவணங்களின் அசலையும் சமர்பிக்குமாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தனக்கு பிணை வேண்டி விசாரணை நீதிமன்றத்தில் புரோஹித் விண்ணப்பித்திருந்தார். அதனை விசாரணை நீதிமன்றம் ரத்து செய்யவே உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். முன்னதாக இவ்வழக்கு தொடர்பாக NIA சமர்பித்துள்ள கூடுதல் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய ஆதாரங்களை பிணை விசாரணையின் போது கருத்தில் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டது.

ஆனால் அதனை விசாரணை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்று கூறி புரோஹித் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். தான் தீவிரவாதத்தை நாடுமுழுவதும் எதிர்ப்பதில் தனது உயிரையும் பணயம் வைத்துள்ளதாகவும் இவ்வழக்கில் தான் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் புரோஹித் சிறையில் ஏழு வருடங்கள் இருந்துள்ளதாகவும் தற்போது NIA இவ்வழக்கு விசாரணையை முடித்துவிட்டதனால் அவருக்கு பிணை வழங்க வேண்டும் என்று புரோஹித்தின் வழக்கறிஞர் கூறியுள்ளார். புரோஹித்தின் பிணை மனுக்கள் 2010 இல் இருந்து தொடர்ச்சியாக நிராகரிக்கபப்ட்டு வந்துள்ளன. கடைசியாக இவரது பிணை மனு 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிராகரிக்கபப்ட்டது.

Comments are closed.