மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்பில்லாத 9 முஸ்லிம்களை விடுவிக்க எதிர்ப்பு

0

2006 ஆம் ஆண்டு மலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக முதலில் கைது செய்யப்பட்ட 9 முஸ்லிம்களுக்கும் அந்த குண்டு வெடிப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தேசிய புலனாய்வுத்துறை இரண்டு வருடங்களுக்கு முன் கூறியிருந்தது. தற்பொழுது குண்டு வெடிப்பில் எந்த தொடர்பும் இல்லை என்று தாங்களே கூறிய நபர்களை விடுவிக்க நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது தேசிய புலனாய்வுத்துறை.

இந்த குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக சாத்வி பிரக்யா சிங் கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக அளிக்கப்பட வாக்குமூலங்கள் நீதிமன்ற ஆவணங்களில் இருந்து காணவில்லை என்று சமீபத்தில் செய்திகள் வெளியாயின. முன்னாள் அரசு வழக்கறிஞர் ரோகினி சாலியன் இந்த வழக்கு குறித்து முன்னதாக கருத்து தெரிவிக்கையில், தேசிய புலனாய்வுத்துறை சாத்திவி பிரக்யா சிங்கிற்கு அவர் வலது சாரி அமைப்பை சேர்ந்தவர் என்பதினால் அவருக்கு ஆதரவான நிலைபாட்டை எடுக்கின்றது என்று குற்றம் சாட்டியிருந்தார். இதனையடுத்து இவர் இந்த வழக்கு விசாரணையில் இறந்து நீக்கப்பட்டார்.

தற்பொழுது சாட்சியங்களின் வாக்குமூலங்கள் காணவில்லை என்று வரும் செய்தி வழக்கறிஞர் ஷாலியனின் குற்றச்சாட்டினை உறுதி செய்வது போல் உள்ளது. நீதிமன்ற ஆவணங்கள் காணமால் போவது மிகவும் அரிதான நிகழ்வுகள். இது பெரும் அலட்சியத்தினால் ஏற்பட்டிருக்க வேண்டும் இல்லை என்றால் வேண்டுமென்றே செய்யப்பட்டிருக்க வேண்டும். எப்படியானாலும் இது வழக்கின் போக்கை வெகுவாக மாற்றக்கூடியது. சாட்சியங்களின் வாக்குமூலங்கள் கானவில்லை என்றால் சாட்சியங்களை எளிதாக மாற்றிவிட முடியும். அவர்கள் இனி தரும் வாக்குமூலங்கள் அவர்கள் முன்னதாக அளித்த வாக்குமூலங்களுடன் ஒப்பிட்டு பார்க்க இயலாது என்பது சட்ட வல்லுனர்களின் கருத்து.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் அமித் ஷா மீதான விசாரணையில் அவரை விடுவிப்பதை எதிர்த்து சி.பி.ஐ எதுவும் செய்யவில்ல. இன்னும் இஷ்ரத் ஜஹான் போலி எங்கெளவுன்டர் வழக்கில் வன்சாரா மீதான பிணை நிபந்தனைகளை தளர்த்தியது என்று பல பா.ஜ.க ஆதரவு நிலைபாடுகள் தேசிய விசாரணை நிறுவனங்களால் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாதாக மலேகான் குண்டுவெடிப்பில் தொடர்பில்லை என்று தேசிய புலனைவுதுரையே சான்றளித்த 9 இளைஞர்களை விடுவிக்க எதிர்ப்பு தெரிவிப்பது உண்மை குற்றவாளிகளை தப்பிக்க செய்து இவர்களை வழக்குகளில் சிக்க வைப்பதற்காகவா என்ற ஐயம் தோன்றுகிறது.

நூருல் ஹுதா, ஷபிர் அஹமத், ரயீஸ் அஹமத், சல்மான் ஃபாரிஸ், ஃபரூக் மக்துமி, ஷேக் முஹ்ஹம்த் அலி, ஆசிஃப் கான், முஹ்ஹம்த் ஷாஹித் மற்றும் அப்ரார் அஹ்மத் ஆகியோர் 2006 ஆம் ஆண்டு மலீகான் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டனர். பின்னர் 2011 நவம்பர் மாதத்தில் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

பின்னர் இதில் இருவர் 2006 ஆம் ஆண்டு நடந்த மும்பை 7/11 ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். இதில் ஷபீர் மார்ச் 2015 இல் ஒரு விபத்தில் உயிரிழந்தார்.

2014 ஏப்ரல் 8 ஆம் தேதி தேசிய புலனாய்வுத்துறை செசன்ஸ் நீதிமன்றத்தில் தனது முதல் அறிக்கையில் இவர்களுக்கு எதிராக தீவிரவாத தடுப்புப் படை சமர்பித்த இறுதி அறிக்கை மற்றும் சி.பி.ஐ சமர்ப்பித்த இணை அறிக்கை ஆகியவற்றை நிரூபிக்கும் எந்த ஒரு ஆதாரங்களும் இல்லையென்று கூறியது. மேலும் தீவிரவாத தடுப்பு படையின் குற்றவாளிகள் பட்டியலில் இல்லாத நான்கு பேரை தனது குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

ஆனால் கடந்த செவ்வாய் கிழமையன்று தீவிரவாத எதிர்ப்பு படையின் வழக்கறிஞர் ராஜா தாக்ரே இந்த ஒன்பது பேரையும் இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதை எதிர்த்தார். ராஜா தாக்ரேவை எதிர்த்து வாதிட்ட வழக்கறிஞர் ஷரிப் ஷேக், இந்த வழக்கிற்கும் தீவிரவாத எதிர்ப்பு படைக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும் , இந்த வழக்கு தேசிய புலனாய்வுத் துறையிடம் மாற்றப்பட்டு விட்டதால் தேசிய புலனாய்வுத் துரையின் கருத்தையே இங்கு எடுத்துகொள்ள வேண்டும் என்றும் வாதிட்டார்.

ஏப்ரல் 6 ஆம் தேதி இந்த ஒன்பது பேரின் வழக்கறிஞர்கள் ஒரு வழக்கில் இரு குற்றவாளிகள் இருக்க முடியாது என்று கூறியுள்ளனர். மேலும் குற்றமற்றவர் என்று விடுவதற்கும் வழக்கில் இருந்து நீக்குவதற்கும் பெரிய வித்தியாசங்கள் உள்ளன. ஒருவரை ஒரு வழக்கில் குற்றமற்றவர் என்று விடுவித்துவிட்டால் அவரை பின்னர் அந்த வழக்கில் சேர்க்க இயலாது. ஆனால் ஒருவரை போதிய ஆதாரம் இல்லாமல் ஒரு வழக்கில் இருந்து நீக்கி விட்டால் அவர்களுக்கு எதிரான தகுந்த ஆதாரங்கள் வரும் பட்சத்தில் அவரை மீண்டும் அவ்வழக்கில் சேர்த்து விசாரிக்க இயலும் என்று வாதிட்டனர்.

Comments are closed.