மலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

0

2006ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி நாசிக் அருகே உள்ள மாலேகானில் ஹமீதியா மசூதிக்கு அருகே நடந்த குண்டு வெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மகாராஷ்டிராவின் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை பிரிவு போலீஸார் இந்த வழக்கை விசாரித்தபோது 9 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட 9 பேருடன் தன் சிங், லோகேஷ் ஷர்மா, மனோகர் நர்வாரியா மற்றும் ராஜேந்திர சவுத்ரி ஆகிய நான்கு பேர் மீதும் புதிதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நால்வரும் 2013ஆம் ஆண்டிலிருந்து சிறையில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், நீதிபதிகள் ஐ.ஏ.மஹந்தி மற்றும் ஏ.எம்.பட்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த நால்வருக்கும் ஜாமின் வழங்க உத்தரவிட்டுள்ளது.

Comments are closed.