மலேகான் வழக்கு குற்றவாளிகளுக்கு கேடயம் போல் NIA செயல்படுகிறது: ரோகினி சாலியன்

0

2008 மாohiniலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் NIA வின் வழக்கறிஞரான ரோகினி சாலியன், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஒரு கேடையம் போல NIA செயல்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக NIA தன்னை இந்த வழக்கில் மென்மைப்போக்கை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டதாக குற்றம் சாட்டினார்.

சாத்வி பிரக்யா சிங்கின் பிணையை வாத தரப்பு எதிர்க்கவில்லை என்றும் அவர்கள் எதிர் தரப்பு வழக்கறிஞர் போல் செயல்படுகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது சட்டவிரோதமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வுத்துறையினரால் திறம்பட நடத்த இயலவில்லை என்றால் மீண்டும் இந்த வழக்கை தீவிரவாத தடுப்பு படையிடம் ஒப்படைக்கட்டும் என்றும் அதற்கு சட்டத்திலும் இடம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் NIA தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ஒரு குற்றப்பத்திரிகையே அல்ல என்றும், இதில் அவர்கள் இந்த வழக்கு குறித்து எந்தவித விசாரணையும் நடத்தவில்லை என்றும் மாறாக ATS அதிகாரிகள் மீது தான் விசாரணை செய்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

கடந்த ஜூன் 28 ஆம் தேதி 2008 மலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி பிரக்யா சிங்கின் பிணையை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் இவர் குற்றமற்றவர் என்ற தேசிய புலனாய்வுத்துறையின் கூற்றையும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

Comments are closed.