மலேசியாவில் புதிதாக இஸ்லாமிய விமான சேவை துவக்கம்

0

மலேசியாவில் உள்நாட்டு விமான சேவையில் புதிதாக இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களை கடைபிடிக்க கூடிய விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவையில் பணியாற்றும் பணிப்பெண்கள் முழுமையான ஆடை அணிந்து தலை முக்காடிட்டு பணியாற்றுகின்றனர். மேலும் இந்த விமான பயணத்தின் பொது மது வழங்கப்படுவதில்லை. ஹலாலான உணவே பரிமாறப்படுகிறது.

ரயாணி என்றழைக்கப்படும் இந்த விமான சேவையின் உரிமையாளர்கள் இஸ்லாமியர்கள் இல்லை என்பது தான் சிறப்பு. மலேசிய விமானம் 370 காணாமல் போனதும் விமானம் 17 தாக்கப்பட்டதும் இறைவனின் கோபம் என்ற நம்பிக்கை மலேசிய மக்களிடையே பரவி வருகிறது, விமானங்களில் இஸ்லாமிய ஒழுக்க முறைகள் கடைபிடிக்காததே இதற்கு காரணம் என்று மலேசிய மக்களில் பெரும்பாலானோர்  நம்புகின்றனர். அவர்களின் இந்த குறையை பூர்த்தி செய்ய ரவி அழகேந்திரன் மற்றும் அவரது மாணவி கார்த்தியானி கோவிந்தன் என்ற தொழிலதிபர்கள் இணைந்து துவங்கப்பட்டதே இந்த ரயாணி விமான சேவை. ரயாணி என்ற வார்த்தையே ரவி என்கிற பெயரையும் கார்த்தியானி என்கிற பெயரையும் இணைத்து ரயாணி என்று பெயரிட்டுள்ளனர்.

விமானத்தில் இஸ்லாமிய ஒழுக்கங்கள் கடைபிடிக்கப்பட்டாலும் பயணிகளிடம் எந்த வற்புறுத்தலும் வைக்கப்படுவது இல்லை. பயணிகள் அவர்கள் விரும்பும் உடை அணைந்து வர அவர்களுக்கு முழு சுதந்திரமும் அளிக்கப்படுகிறது. இது குறித்து விமான சேவையின் அதிகாரி ஜாபார் ஜம்ஹாரி கூறுகையில் நாங்கள் மக்களுக்கு ஒரு மாற்று ஏற்படுத்தி கொடுக்க முயற்சித்துள்ளோம். இந்த விமான சேவையில் அனைத்து மக்களும் ஜாதி மத பேதமின்றி பயணிக்கலாம் என்று கூறியுள்ளார்.

உலகில் சவுதி அரேபியா, ஈரான் நாட்டிற்கு பிறகு மலேசியாவில் தான் இத்தகைய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Comments are closed.