மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்த பிரிட்டன்

0

கிங் ஃபிஷர் மதுபான தொழிலதிபர் மல்லையா இந்திய வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகளை கடனாக வாங்கிவிட்டு பின் அதனை திருப்பி செலுத்தாமல் லண்டன் சென்று மறைந்து கொண்டார்.

அவரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்காக அவரது இந்திய பாஸ்போர்ட்டை ரத்து செய்தது. ஆனால் அவரை நாடுகடத்த மறுத்த பிரட்டன் மல்லையாவை இந்தியாவிடம் சரணடையச் செய்ய விண்ணப்பித்தால் அது பிரிட்டனால் பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ளது.

மல்லையாவின் இந்திய பாஸ்போர்ட்டை இந்திய அரசாங்கம் ரத்து செய்ததை அடுத்து மல்லையா இந்தியாவிடம் பிரிட்டனால் ஒப்படைக்கப்படுவார் என்று நம்பப்பட்டது. ஆனால் பிரிட்டன் குடியேற்றச் சட்டப்படி ஒருவர் பிரிட்டனில் நுழைந்தபின் தங்கியிருக்க சரியான பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என்று வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கடந்த புதன் கிழமை தெரிவித்துள்ளார்.

அதே சமயத்தில் மல்லையா மீது சுமத்தப்பட்ட குற்றத்தின் தீவிரத்தை பிரிட்டன் உணர்ந்துள்ளதாகவும் இந்திவுடன் சட்டப்பூர்வமாக ஒத்துழைக்க பிரிட்டன் தாயாராக உள்ளது என்றும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து மல்லையா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன் அவரை இந்தியாவிற்கு ஒப்படைக்க பிரிட்டனிடம் சட்டப்பூர்வமாக அணுகப்படும் என்று அருண் ஜெயட்லீ தெரிவித்துள்ளார்.

Comments are closed.