மஹாராஷ்டிரா: மதக் கல்வியை மட்டும் போதிக்கும் மதரஸாகளின் அங்கீகாரம் ரத்து

0

மதக் கல்வியை மட்டும் போதிக்கும் மதரஸாகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது என்று மஹாராஷ்டிரா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஆங்கிலம், கணிதம், அறிவியல் போன்ற பாடங்களை மதரஸாகள் கற்றுக் கொடுப்பதில்லை என்றும் அங்கு படிக்கும் மாணவர்கள் ‘பள்ளியில் படிக்காத மாணவர்களாக’ கருதப்படுவர் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டும் என்பதற்காகவே தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக மாநில சிறுபான்மைதுறை அமைச்சர் ஏக்நாத் கட்சே தெரிவித்துள்ளார். மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 1890 மதரஸாகளில் 550 மதரஸாகள் பொதுப் பாடங்களை நடத்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஆனால் ஊழல் புகார்களில் சிக்கியுள்ள அரசாங்கம் மக்களை திசை திருப்பவே இந்த அறிவிப்பை செய்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
மதராஸகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதே சமயம் வேதக் கல்வியை மட்டும் கற்றுக் கொடுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதனிடையே எதிர்ப்புகள் வலுத்துள்ளதை தொடர்ந்து, மதரஸாகளின் அங்கீராத்தை ரத்து செய்யும் முடிவு எதையும் அரசாங்கம் எடுக்கவில்லை என்று மாநில கல்வித்துறை அமைச்சர் வினோத் தாவ்டே தெரிவித்துள்ளார்.

Comments are closed.