மஹாராஷ்டிரா முதல்வர் இஸ்ரேல் பயணம்

0

மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நான்கு நாள் பயணமாக நேற்று இஸ்ரேல் சென்றுள்ளார். ‘மேக் இன் மஹாராஷ்டிரா’ திட்டம் குறித்து நடைபெறவுள்ள கருத்தரங்களில் அவர் முக்கிய பேச்சாளராக உரையாற்றவுள்ளார்.
இது தவிர, விவசாயம் குறித்த ஒரு கண்காட்சியிலும் அவர் கலந்து கொள்கிறார். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடனும் அவர் சந்திப்பை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தின் போது இஸ்ரேல் விவசாய துறை அமைச்சர் யயிர் ஷமீர் மற்றும் உயர் அதிகாரிகளை மஹாராஷ்டிரா முதல்வர் சந்தித்து உரையாடுவார்.
மேகாலாயா முதல்வரும் விவசாயம் குறித்து நடைபெறவுள்ள கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக இன்று இஸ்ரேல் செல்கிறார்.

Comments are closed.