மாடுகளை திருடியதாக எழுந்த சந்தேகம்: கொலைவெறி தாக்குதலால் 3 பேர் பலி!

0

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள பனியப்பூர் என்ற ஊரின் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் பனியப்பூருக்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் மாடுகளை திருட வந்ததாக சந்தேகிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஊர்வாசிகள் அந்த 3 பேரை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் மூவரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவர்கள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் மாடுகளை திருடியதாக குற்றம்சாட்டி உயிரிழந்தவர்களுக்கு எதிராகவும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மூவரும் மாடுகளை திருட தான் வந்தார்களா என இன்னும் உறுதிப்படத் தெரியவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Comments are closed.