மாட்டின் பெயரால் தொடரும் கொலைகள்

0

மாட்டின் பெயரால் தொடரும் கொலைகள்

மாட்டின் பெயரால் நாட்டில் மனித உயிர்கள் பறிக்கப்படுவது தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. மாட்டின் பெயரால் முஸ்லிம்கள் அதிகளவில் படுகொலை செய்யப்படுவதாகவும் 2014ல் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்த கொடூரங்கள் மிகவும் அதிகரித்துவிட்டதாகவும் பல்வேறு தரவுகள் தெரிவிக்கின்றன.

ஜூன் 18 அன்று உத்தர பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டம் பில்குவா பகுதியை சார்ந்த 50 வயதான காசிம் தனது கிராமத்தில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஜேரா குர்த் என்ற கிராமத்திற்கு சென்றார். ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததை தொடர்ந்து தனது மகன் மஹ்தபிடம் ஆடு அல்லது மாட்டை வாங்கி வருவதாக கூறி வீட்டை விட்டு கிளம்பினார். தொலைபேசியில் அழைத்தது யார் என்பதை மாட்டிறைச்சி வியாபாரியான காசிம் தெரிவிக்கவில்லை. தனது தந்தைக்கு தெரிந்தவர்களாக இருக்கலாம் என்று மஹ்தப் நினைத்துக் கொண்டார். அன்று மாலை பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் தொலைபேசியில் அழைத்ததை தொடர்ந்து குடும்பத்தினர் காவல் நிலையம் சென்றனர். அங்கு காசிம் இல்லாததால் மருத்துவமனைக்கு சென்றனர். மருத்துவமனையில் காசிமை சடலமாகத்தான் கண்டனர்.

காசிம் செல்லும் வழியில் அவரை இடைமறித்தவர்கள் (ராஜ்புத் இனத்தை சேர்ந்தவர்கள்) அவரை அடித்து, துன்புறுத்தி கொலை செய்தனர். காசிம் தாக்கப்படும் போது அதனை தடுக்க வந்த சமியுதீன் என்பவரையும் வன்முறை கும்பல் தாக்கியுள்ளது. சமியுதீன் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். பசு மற்றும் கன்றை இருவரும் அறுக்க முற்பட்டதாகவும் அதனால்தான் தாக்கப்பட்டதாகவும் வன்முறை கும்பல் வதந்திகளை பரப்பியது. பசு எங்கே, அறுக்க பயன்பட்ட ஆயுதம் எங்கே என்ற எந்த கேள்விக்கும் பதில் இல்லை. முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் காசிம் படுகொலை செய்யப்பட்டதாக அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்


Comments are closed.