மஹாராஷ்டிரா: மாட்டிறைச்சி தடையை உறுதி செய்த நீதிமன்றம்

0

மும்பை: மஹாராஷ்டிரத்தில் மாட்டிறைச்சி விற்கவும், உண்ணவும் மாநில அரசு தடைவிதித்தது ஏற்கத்தக்கது என மும்பை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. முன்னதாக மாநில அரசின் முடிவை எதிர்த்து ஏராளமான மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களை நீதிபதிகள் வி.எம்.கானடே,எம்.எஸ்.சோனாக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து இந்த தீர்ப்பை வழங்கியதாக மனுதாரர்களில் ஒருவரான மாட்டிறைச்சி விற்பனை கடைகள் சங்கத்தின் நிர்வாகி விஜய்டால்வி தெரிவித்தார்.

மாநில அரசு விதித்துள்ள தடையால் விவசாயிகள், இறைச்சி சாப்பிடுவோர், இறைச்சிக்கடைக்காரர்கள், தோல் தொழில்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச் சனைகளை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்ல தெற்கு மும்பையில் பேரணி நடத்தப்படும் என்றார் டால்வி.

Comments are closed.