மாட்டிறைச்சி உண்ணாமல் வாழ முடியாது என்றால் ஹரியானாவிற்கு வராதீர்கள் – அணில் விஜ்

0

ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அணில் விஜ் “மாட்டிறைச்சி சாபிடாமல் வாழ முடியாது என்றால் ஹரியானாவிற்கு வராதீர்கள்” என்று கூறியுள்ளார். ஹரியானா முதலமைச்சர் மனோஹர்லால் கட்டார் வெளிநாட்டினருக்கு மட்டும் மாட்டிறைச்சி உண்ண சிறப்பு உரிமம் வழங்கப்படும் என்று கூறியதை அடுத்து அணில் விஜ் இப்படி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் அணில் விஜ், “யாரெல்லாம் மாட்டிறைச்சி சாபிடாமல் வாழ முடியாது என்கிறார்களோ அவர்கள் ஹரியானா வரவேண்டாம். அவர்கள் இங்கு வரவேண்டிய அவசியம் என்ன? உலகின் பல நாடுகளுக்கு அவர்களின் உணவு பழக்க வழக்கம் காரணமாக இந்தியர்கள் செல்வதில்லை” என்று கூறியுள்ளார்

மேலும் அவர் கூறுகையில், “முதலமைச்சர் மாட்டிறைச்சி உண்ணும் வெளிநாட்டினருக்கு சிறப்பு உரிமம் வழங்கப்படும் என்று கூறினார். பின்னர் அந்த கருத்தை திரும்ப பெற்றுகொண்டார்.” என்றும் “நான் ஒரு சைவம். அசைவ உணவு பரிமாறப்படும் விழாக்களுக்கு நான் செல்வதில்லை. ஹரியானாவில் பசுவின் பாதுகாப்பிற்காக மிகக் கடுமையான சட்டங்கள் உள்ளன. இப்படி இருக்க விஷேஷ உரிமம் வழங்குவதற்கு வாய்ப்பே இல்லை” என்று கூறியுள்ளார். இவர் இந்தியாவின் தேசிய விலங்காக புலிக்கு பதிலாக பசுவினை மாற்ற வேண்டும் என்று பிரச்சாரம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஹரியானா, மாட்டிறைச்சி

Comments are closed.