மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களிடமிருந்து பா.ஜ.க நன்கொடையாக பெற்ற தொகை ரூ.2.5 கோடி!

0

புதுடெல்லி:மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களிடமிருந்து பாரதீய ஜனதா கட்சி ரூ.2.5 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது.2013-14,2014-2015 ஆகிய காலக்கட்டங்களில் இத்தொகையை இந்தியாவில் பிரபல மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களிடமிருந்து பாரதீய ஜனதா கட்சி நன்கொடையாக பெற்றுள்ளதாக அக்கட்சி தேர்தல் கமிஷனுக்கு சமர்ப்பித்த வரவு-செலவு கணக்கு விபரத்தில் குறிப்பிட்டுள்ளது.

Frigorifico Allana Ltd, Frigerio Converva Allana Ltd and Indagro Foods Ltd ஆகிய நிறுவனங்களிடமிருந்து இத்தொகை பெறப்பட்டுள்ளது.ரூ.20 ஆயிரத்திற்கும் அதிகமாக நன்கொடையாக பெறும்போது அதுக் குறித்த விபரத்தை தேர்தல் கமிஷனுக்கு அளிக்கவேண்டும் என்பது சட்டம்.2014-15 காலக்கட்டத்தில் பா.ஜ.க நன்கொடையாக ரூ.437.35 கோடி நன்கொடையாக பெற்றுள்ளது.

மாட்டிறைச்சிக்கு எதிராக அக்கட்சியினர் தீவிரமாக கருத்துக்களை வெளியிட்டு வரும் சூழலில் மாட்டிறைச்சி ஏற்றமதி நிறுவனங்களிடமிருந்து நன்கொடையை பெற்றிருப்பது அக்கட்சியின் இரட்டை வேடத்தை தோலுரித்து காட்டுகிறது.

Comments are closed.