மாட்டிறைச்சி சாப்பிட்ட மாணவர்கள் மீது தாக்குதல்!

0

பெங்களூர்:மாட்டிறைச்சி சாப்பிட்டதால் கேரளாவைச் சார்ந்த 3 மாணவர்களை ஒரு கும்பல் வீட்டில் நுழைந்து தாக்குதல் நடத்தியது.இச்சம்பவம் பெங்களூர் பூபசப்திராவில் உள்ள சஞ்சய் நகரில் நடந்துள்ளது.தாக்குதலில் மாணவர்கள் காயமடைந்தனர்.கேரளாவைச் சார்ந்த மர்வின் மிகாயேல் ஜோய், நிகில் காமேஷ்வர், முஹம்மது ஹாஷிர் ஆகியோரை அப்பகுதியைச் சார்ந்த ஒரு கும்பல் தாக்கியது.

தாக்குதலில் கடுமையாக காயமுற்ற பிருந்தாவன் கல்லூரி மாணவர் மர்வின் மிகாயேல், நிம்ஹான்ஸ் மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.கம்புகளுடன் வந்த ஒரு கும்பல் கேரளாவைச் சார்ந்தவர்களா? எனக் கேட்டு தாக்கியுள்ளனர்.

இந்த மாணவர்கள் தங்கியுள்ள இடத்திற்கு அருகில் கோயில் உள்ளது.ஆகையால், அவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக போலீஸ் கூறுகிறது.

Comments are closed.