மாட்டிறைச்சி திருவிழாவை ஒருங்கிணைத்த மாணவர் தேர்வெழுதுவதில் இருந்து தடுப்பு

0

மாட்டிறைச்சி விவகாரத்தில் அக்லாக் கொல்லப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. அவ்வகையில் கேரளாவில் மாணவர்கள் பலர் மாட்டிறைச்சி உண்பது ஒன்றும் கொலை குற்றமல்ல என்பதனை மக்கள் மன்றத்தில் பிரச்சாரம் செய்ய மாட்டிறைச்சி திருவிழாவை கொண்டாடினர். இவ்விழாவில் மாட்டிறைச்சி சமைத்து உண்டு பிறருக்கும் உண்ணக் கொடுக்கப்பட்டது.

இவ்விழாவை ஒருங்கிணைத்த மாணவர்களில் ஒருவரான முஹ்ஹத் ஜலீஸ் என்ற 27 வயது மாணவரை அவரது PhD தேர்வு எழுதுவதில் இருந்து தடுத்துள்ளது நிர்வாகம். அவர் அவரது ஆங்கிலம் மற்றும் வேற்று மொழிகள் தேர்வை எழுதுவது விட்டும் தடுக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணமாக அவர் மீது காவல் துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த முஹ்ஹம்த் ஜலீஸ் தன் மீது வழக்கு பதிவி செய்யப்பட்டிருகின்றது என்கிற விஷயமே தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். அரபியில் எம்.ஏ பட்டம் பெற்றுள்ள அவர் தேர்வுக்கான தனது அனுமதி அட்டையை பெறச் செல்லும் போது தான் அவரால் தேர்வெழுத முடியாது என்கிற செய்தி அவருக்கு தெரியப்படுத்தப்பட்டது என்று கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில் “டிசம்பர் 11 2015 ஆம் ஆண்டு ஒஸ்மானியா பல்கலைகழக மாணவர்கள் மாட்டிறைச்சி திருவிழாவை ஏற்பாடு செய்த போது எங்கள் பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர்கள் சிலரும் அவர்களுடன் இணைத்து திருவிழாவை நடத்தினோம். அவ்விழாவின் புகைப்படமும் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டது. இதனை அடுத்து தங்கள் மீது பல்கலைகழக நிர்வாகத்தில் இருந்து வழக்கு தொடரப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

தங்கள் மீது இந்த புகாரை பதிவு செய்தவர்கள் இந்த மாட்டிறைச்சி திருவிழாவோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் இவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்ணை பின்தொடர்வது ஆகிய பிரிவுகளிளும் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால் இது குறித்து எந்த ஒரு அறிவும் தனக்கு இருந்திருக்கவில்லை என்று ஜலீஸ் கூறியுள்ளார்

உலகளவில் மாட்டிறைச்சி ஏற்ற்றுமதியில் இந்தியா முதல் இடத்திலும் உட்கொள்வதில் ஐந்தாம் இடத்திலும் இருக்கின்ற போதிலும், பா.ஜ.க ஆட்சியில் மாட்டிறைச்சி தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

மேலும் படிக்க: மாட்டிறைச்சி

Comments are closed.