மாட்டிறைச்சி விவகாரம் : இந்திய ஊடகங்களின் முகத்திரை கிழிப்பு – நேபாள் அதிகாரிகள் பரபரப்பு பேட்டி!

0

இந்து நாடான நேபாளில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் முன்னணி நாடுகள் இன்று வரை மௌனம் காத்து வரும் நிலையில்…

நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் துடிதுடித்த முதல் நாடான பாகிஸ்தான் தம்முடைய ராணுவத்தையும் மருத்துவத்தையும் நேபாளுக்கு அனுப்பி மீட்பு பணியிலும், மருத்துவ உதவியிலும் இன்று வரை அங்கே முகாம் அமைத்து சேவையாற்றி வருகிறார்கள்.

மேலும் விமானங்களில் உணவுகள் அனுப்பி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பசியையும் போக்கி வருகின்றனர்.

பாகிஸ்தானின் உதவிக்கு பிறகு ஏனைய முஸ்லிம் நாடுகள் நேபாளுக்கு உதவின.

இதனால் பாகிஸ்தானுக்கும் முஸ்லிம்களுக்கு நற்பெயர் கிடைத்தது. அந்த நற்பெயரை உடைப்பதற்காக எப்போதும் இந்துத்துவாவின்  இந்திய ஊடகங்கள் பாகிஸ்தான் அனுப்பிய உணவில் மாட்டிறைச்சி இருந்ததாகவும், இந்துக்களின் மனதை புண்படுத்தி விட்டதாகவும் பரபரப்பு செய்தி வெளியிட்டு முஸ்லிம்கள் மீதும் பாகிஸ்தான் மீதும் வெறுப்பை உருவாக்கினர்.

இதற்கிடையில் நேபாள் அதிகாரிகள் இந்திய ஊடகங்களின் முகத்திரையை கிழித்து பரபரப்பு பேட்டியளித்துள்ளனர்.

பாகிஸ்தான் சார்பில் அனுப்பட்ட ஒவ்வொரு உணவு கிட்டிலும், 22 வகையான சாப்பிடத்தயாரான உணவு வகைகள் இருந்தன.

அதில் அரிசி, உணவு, கோதுமை, ரொட்டி, பிரட், ஜாம், பால், தயிர், பருப்பு, ஊறுகாய், ரசம், கேசரி, உள்ளிட்ட பலவகையான சிறிய பாக்கெட்கள் இருந்தன, அதில் ஒன்று தான் ‘பீப்’ மசாலா.

மேற்படி உணவுக் கிட்டில், தேவையானதை சாப்பிடவும் பிடிக்காததை தவிர்ந்துக் கொள்ளும் வகையில், ஒவ்வொரு பாக்கெட்டின் மீதும் ஆங்கிலம் மற்றும் உருது மொழியில் இது இன்ன பொருள் எனத்தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால், யாருடைய மனமும் புண்படும் பேச்சுக்கே இடமில்லை,

மேலும் பாகிஸ்தானிலிருந்து வந்த உணவு வகைகள், சுவை மிகுந்ததாகவும் தரமாகவும் இருந்தது. பாகிஸ்தான் வழக்கமாக அனுப்புவதைவிட கூடுதலாக ஒரு விமானம் உணவு வகைகளை அனுப்பி வைக்க வேண்டும்.

மேற்கண்டவாறு அதிகாரிகள் பேட்டியளித்தனர்.

மனிதநேயத்திலும் மத சாயத்தை பூசி தம்முடைய இந்துத்துவ காவி புத்தியை காட்டிய இந்திய ஊடகங்கள் நேபாள் அதிகாரிகளின் பேட்டிக்கு தூக்கு மாட்டி சாகுமா ? மன்னிப்பு கேட்குமா ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Comments are closed.