மாணவர்களுக்கு இஸ்லாமிய வீட்டுபாடம் – அமெரிக்காவில் பள்ளிகள் மூடல்

0

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியர் மாணவர்களுக்கு இஸ்லாமிய வீட்டுப்பாடம் கொடுத்தது அப்பகுதி மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் விஜீனியா மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

ரிவர்ஹெட்ஸ் உயர்நிலை பள்ளியின் ஆசிரியர் ஒருவர் அரேபிய கையெழுத்து பயிற்சிக்காக (Caligraphy) இஸ்லாமிய சஹாதாவை வீட்டுப்பாடமாக கொடுத்துள்ளார். இது மாணவர்களின் பெற்றோர்கள் மற்றுமல்லாது அப்பகுதி மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமல்லாமல் விர்ஜீனியா மாகாணத்திற்கு வெளியே வசிப்பவர்களும் கூட அந்த பள்ளிக்கு தங்களது அதிருப்தி புகார்களை அனுப்பி வருகிறார்கள். இதனால் பள்ளிகளில் அசம்பாவிதம் எதுவும் நடந்து விட கூடாது என்பதற்காக அப்பகுதியில் உள்ள னைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. மேலும்  காவல்துறையினரும் கூடுதலாக பள்ளிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வீட்டுப்பாடம் குறித்து பெற்றோர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், இந்த வீட்டுப்பாடம் போலியான மத கோட்பாட்டை கற்றுக்கொடுப்பதாக கூறியுள்ளார். இன்னும் சிலர் இந்த வீட்டுப்பாடத்தை மாணவர்களுக்கு கொடுத்த ஆசிரியர் செரில் லாபோர்டே வை பள்ளியில் இருந்து நீக்குமாறு வற்புறுத்துகின்றனர். இந்த சர்ச்சையை அடுத்து ஆசிரியர் லாபோர்டே வின் முன்னாள் மாணவர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து அந்த பள்ளியின் நிர்வாகம் கூறுகையில், அந்த ஆசிரியர் இந்த வீட்டுபாடத்தை உலக மதங்கள் பற்றிய பாட புத்தகத்தில் இருந்தே எடுத்துள்ளார் என்றும் யூத கிறித்தவ வழிபாட்டு முறைகள் குறித்து பாடங்கள் உள்ள அதே பாட புத்தகத்தில் தான் இஸ்லாம் குறித்தும் உள்ளது என்றும் கூறியுள்ளது. மேலும் இந்த வீட்டுப்பாடம் மாணவர்களுக்கு இஸ்லாத்தை போதிக்கும் விதமாக கொடுக்கப்படவில்லை என்றும் மாறாக அராபிய மொழியின் கடினத்தன்மையை உணர்த்தவே அந்த வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டது என்று கூறியுள்ளது. இனியும் உலக வழிபாட்டு முறைகள் குறித்த பாடங்கள் பள்ளியில் தொடரும் என்றும் ஆனால் இனி இஸ்லாம் சாராத அராபிய வீட்டுப்பாடங்கள் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் என்று அந்த பகுதி அரசு நிர்வாகி கூறியுள்ளார்.

உலக வழிபாட்டு முறைகளை மதம் சாராத பாடங்கள் மூலம் மாணவர்களுக்கு எவ்வாறு கற்றுக்கொடுக்கும்போகிறார்கள் என்பது தான் தெரியவில்லை.

 

Comments are closed.