மாமரம் வழங்கும் மாபெரும் படிப்பினை!

0

மாமரம் வழங்கும் மாபெரும் படிப்பினை!

ஒரு மாமரத்தில் இரண்டு மைனாக்கள் வாழ்ந்து வந்தன. பச்சைநிற இலைகள் படர்ந்த அந்த மாமரம் பூ பூக்கும் காலம் வந்தது. மரமெங்கும் இளமஞ்சள் நிறத்தில் கொத்து கொத்தாய் பூக்கள். அதைக் கண்ட ஒரு மைனா, ‘அடடா! பச்சை மரத்தில் இளமஞ்சள் பூக்கள்! ஏன் இளமஞ்சள் நிறத்தில் பூக்க வேண்டும்?’ என்று இன்னொரு மைனாவிடம் கேட்டது.

அதற்கு அந்த மைனா, ‘பூக்கள் மலர்ந்தது வெளியே தெரிந்தால்தானே வண்டுகளும் வண்ணத்துப்பூச்சிகளும் வரிசையாக படையெடுத்துவரும். அப்படி வந்தால்தானே மகரந்தச்சேர்க்கை நடைபெறும்’ என்று பதில் சொன்னது.

சிலநாள்கள் கழித்து, மரத்தில் பூக்கள் இருந்த இடத்தில் எல்லாம் பச்சை நிறத்தில் மாம்பிஞ்சுகள். அவற்றைக் கண்டதும், ‘அட! இளமஞ்சள் பூக்களில் பச்சை நிறக்காய்கள்! காய்கள் ஏன் பச்சை நிறத்தில் உள்ளன?’ என்றது ஒரு மைனா.

அதற்கு இன்னொரு மைனா, ‘மரத்தின் இலைகளைப் போலவே காய்களும் பச்சை நிறத்தில் இருந்தால்தான் ஆபத்து அதிகம் இல்லாமல் வளர முடியும்’ என்றது.

கொஞ்ச நாள்களில் காய்கள் முற்றி, மஞ்சள்நிறப் பழங்கள் மரம் முழுவதும் காட்சியளித்தன. அதைப்பார்த்து வியந்துபோன ஒரு மைனா, ‘ஆஹா! பழுத்து முற்றியதும் ஏன் மீண்டும் மஞ்சளாகிப் போயின பழங்கள்?’ என்று கேள்வி கேட்டது. ‘பார்த்தவரெல்லாம் பறித்து சாப்பிட வேண்டும் அல்லவா! அதனால்தான் அப்படி காட்சி அளிக்கின்றன’ என்று பதில் சொன்னது இன்னொரு மைனா.

‘இப்படி… இளமஞ்சள் பூ பூத்து, பச்சை நிறக் காயாகி, மஞ்சள் நிறப் பழமாவதாலும், அதைப் பறித்துத் தின்பதாலும் அந்த மரத்துக்கு என்ன பயன்?’ என்றது முதல் மைனா. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.