மாற்றம் காண மாற்றி வாக்களிப்போம்!

0

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மன்பஈ அறிக்கை. கண்ணிய மிகு காயிதேமில்லத் அவர்களுக்கு பிறகு நீண்ட நெடும் காலமாக தமிழக முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் வெற்றிடம் இருந்தே வருகின்றது.

ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களை கருவேப்பில்லை போன்றுதான் பயன்படுத்தி வருகின்றது. தேர்தல் நேரத்தில் மட்டும்தான் தமிழகத்தில் முஸ்லிம்கள் இருப்பதே அவர்களின் கண்களுக்கு புலப்படுகின்றது. அதுவரையிலும் முஸ்லிம்களுக்கு ஏற்படும் துன்பகளுக்கு எந்த ஒரு பதிலையும் கொடுப்பதில்லை. அவர்களின் வளர்ச்சி குறித்தும் எந்த ஒரு ஆரோக்கியமான செயல்திட்டங்களையும் செய்ததில்லை.

பெயர் சொல்லும் அளவிற்கு முஸ்லிம் கட்சிகள் இருந்தும் எல்லா நிலைகளிலும் திராவிட கட்சிகளை சார்ந்தே இருக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை தங்களுக்கு தாங்களே விதித்து கொண்டார்கள் அதன் காரணமாகவே நீண்ட காலங்களாக தங்களின் சுய சின்னத்தில் போட்டியிடக் கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இன்னும் கூட அந்த நிலைகள் தொடர்வது வேதனையளிக்கின்றது.

ஒருங்கிணைந்து முஸ்லிம்கள் மட்டும் தேர்தலை தனித்து சந்தித்தால் நிச்சியமாக இன்று இருக்கும் அரசியல் சூழ்நிலையில் 50க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றியும் மற்றுமுள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றியை தீர்மானிக்கும் மக்களாக நாம்தான் இருப்போம்.

இந்த சூழல்களுக்கு எந்த கட்சிகளும் முன்வராத நிலையில் தேசிய அளவில் அரசியல் களத்தில் மிகப்பெரும் மாற்றங்களும் புரட்சிகளும் செய்து வரும் எஸ் டி பி ஐ கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 33 தொகுதிகளில் தனித்து களம் காணுவது நீண்ட காலமாக ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியாகவே நாம் பார்க்கின்றோம்.

தேர்தலில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவது யதார்த்தமானது. இந்த தேர்தலில் முஸ்லிம்களின் தனிப்பெரும்பான்மையை நிரூபிப்பது காலத்தின் கட்டாயமாகும் இந்த வாய்ப்பை தவற விட்டுவிடுவோமானால் இன்னும் 5 ஆண்டுகள் காத்திருக்கும் நிலை ஏற்படும். தமிழக தேர்தல் வரலாற்றில் மூன்று ஆலிம்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டது இந்த தேர்தலில்தான்.

எஸ் டி பி ஐ கட்சியின் இந்த ஆரோக்கியமான அறிவிப்பு அனைத்து மக்களிடத்திலும் நல்ல நன்மதிப்பை பெற்றுள்ளது. இந்திய சுதந்திர போரட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பங்களிப்பு யாராலும் மறக்க முடியாது மறுக்கவும் முடியாது. அத்தகைய முஸ்லிம்களை வழிநடத்திச் சென்ற ஆலிம்களின் தியாக வரலாற்றையும் யாரும் எளிதில் மறந்து விட முடியாது. ஆலிம்கள் சமூக விடுதலைக்கும், அமைதிக்கும், முன்னேற்றத்திற்கும் தங்களை முழுமையாக அர்பணிக்க எல்லா நேரத்திலும் தயார் நிலையில் உள்ளவர்கள் என்பதற்கு எத்தனையோ நிகழ்வுள் சாட்சியாக உள்ளது.

அது போன்றுதான் தற்போது எஸ் டி பி ஐ கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள மூன்று ஆலிம்களும் தாங்கள் மதரசாக்களில் ஓதும் காலந்தொட்டே சமூக பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டவர்கள். ஏறத்தாள 20 ஆண்டுகளாக சமூக எழுச்சிக்கும், மாற்றத்திற்குமான பல போராட்டங்களை முன்னெடுத்து சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல சமூகம் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? அவலங்கள் என்ன? என்பதையும் அதற்கான சரியான தீர்வு என்ன என்பதையும் தெளிவாக தங்களுடைய 20 ஆண்டு போராட்ட பயணத்தின் மூலம் அறிந்து வைத்துள்ளார்கள்.

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலில் அங்கம் வகிக்கும் ஆலிம்களும் ஏனைய அனைத்து ஆலிம் பெருமக்களும் இந்த மூன்று ஆலிம்களையும், இன்னும் எஸ் டி பி ஐ கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்யவைப்பதற்கு முழு வீச்சில் பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இப்படிக்கு
மௌலவி ஆபிருத்தீன் மன்பஈ
மாநில தலைவர்
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்
-தமிழ்நாடு

Comments are closed.