மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல்: முன்னாள் அதிபர் முகமது நஷீத் அணி வெற்றி

0

மாலத்தீவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் அணி அமோக வெற்றி பெற்றுள்ளார்.

மாலத்தீவில் 19-வது நாடாளுமன்றத்தைத் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மொத்தம் 87 தொகுதிகளில், முன்னாள் அதிபர் முகமது நஷீத் மாலத்தீவு ஜனநாயக கட்சி 65 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இது, மூன்றில், இரண்டு பங்கு பெரும்பான்மை விட அதிகமாகும். மேலும் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

இந்த வெற்றி குறித்து பேசிய முகமது நஷீத், மாலத்தீவில் ஜனநாயகம் திரும்ப செய்வேன் என்றார்.

முகமது நஷீத் மீது பயங்கரவாத வழக்கு தொடரப்பட்டதால் வெளி நாட்டில் தஞ்சம் அடைந்தார். பின்னர், அந்த வழக்கை மாலத்தீவு உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் ரத்து செய்த பிறகு தான் அவர் மாலத்தீவுக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply