மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: பிரக்யா சிங் தப்புகிறார்?

0

இந்தியாவின் இந்துத்துவ தீவிரவாதத்தின் ஒரு முகமாக மக்களுக்கு பரிட்சயமான பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் தாகூர் 2008 மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்படலாம் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கின் ஆவணங்கள் காணாமல் போனது, சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறியது ஆகியவை இவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக தெரிகிறது. (பார்க்க செய்தி)

இது குறித்து தேசிய புலனாய்வுத்துறை கூறுகையில் பிரக்யா சிங் தாகூரை மாலேகான் குண்டுவெடிப்புடன் தொடர்பு படுத்த தங்களிடம் போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் ஆனால் கர்னல் புரோஹித்தை குற்றம் சாட்ட போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் தேசிய புலனாய்வுத்துறை கூறியுள்ளது.

புரோஹித் மீதான குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வுத்துறை இறுதி செய்து வருகிறது . அதில் புரோஹித் அபினவ் பாரத் என்ற ஒரு அமைப்பை  துவக்கியதாகவும் அதன் உறுப்பினர்கள் சிலரை சந்தித்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது குறித்து திட்டமிட்டதாகவும் NIA கூறியுள்ளது. பிரக்யா சிங்கிற்கு எதிரான ஆதாரங்கள் வலுவில்லாமல் உள்ளன என்றும் அதனால் அவர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட வாய்ப்பில்லை என்றும் புலனாய்வுதுறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்துத்துவ தீவிரவாதிகள் தொடர்பான வழக்குகளில் ஆளும் பா.ஜ.க அரசு மென்மை காட்டி வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையாகி வருவதோடு அல்லாமல் அவர்களை தப்ப வைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறதோ என்ற சந்தேகமும் வலுக்கிறது.

 

Comments are closed.