மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யா சிங் உட்பட ஐந்து பேர் விடுவிப்பு

0

2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் புதிய திருப்பமாக அந்த வழக்கில் மறைந்த தீவிரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரேவால் கைது செய்யப்பட்ட சாத்வி பிரக்யா சிங் உட்பட ஐந்து பேர் குற்றமற்றவர்கள் என்று கூறியுள்ளது தேசிய புலனாய்வுத்துறை. இவர்கள் மீது MCOCA சட்டத்தின் படி பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை எனவும் இதனால் அவர்கள் மீதான வழக்குகளை நீட்டிக்க எந்த அவசியமும் இல்லை என்று கூறியுள்ளது தேசிய புலனாய்வுத்துறை.

2008, செப்டெம்பர் மாதம் 29 ஆம் தேதி ஈகை பெருநாள் தொழுகையை முடித்து மக்கள் வெளிவரும் வேலையில் நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான பிரக்யா சிங் அக்டோபர் மாதம் 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு முதலில் மும்பை தீவிரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரேவால் விசாரிக்கப்பட்டது. தேசிய புலனாய்வுத்துறைக்கு மாற்றப்படும் முன்னர் இந்த வழக்கில் 14 நபர்கள் மீது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்திருந்தது தீவிரவாத தடுப்பு படை. ஹேமந்த் கர்கரே 26/11 தீவிரவாத தாக்குதலில் கொலைசெய்யப்பட்டார். இவரது கொலையில் பல சந்தேகங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது தேசிய புலனாய்வுத்துறை சமர்பித்துள்ள குற்றப்பத்திரிக்கையில் இந்த வழக்கை தீவிராத தடுப்புப் பிரிவு விசாரணை செய்த முறை சந்தேகத்திற்குரியது என்று கூறியுள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய சாட்சி மாயமானதற்கு தீவிரவாத தடுப்பு பிரிவினரே காரணம் என்று சி.பி.ஐ. கண்டறிந்துள்ளதாக கூறியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான முக்கிய சாட்சிகளின் வாக்குமூலம் அடங்கிய கோப்புகள் காணாமல் போனது என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. தற்பொழுது NIA வின் புதிய சாட்சி ஒன்று மகாராஷ்டிர ATSஇன் துணை ஆணையர் ஒருவர் சுதாகர் சதுர்வேதியின் வீட்டில் சந்தேகத்திற்குரிய முறையில் இருந்ததாகவும் அங்கு அவர் சந்தேகத்திற்குரிய செயல் ஏதோ ஒன்றை செய்து கொண்டிருந்தார் எனவும் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் சதுர்வேதியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட RDX நம்பத்தகுந்ததல்ல என்று NIA கூறியுள்ளது.

தற்பொழுது இந்த வழக்கில் கலோனல் புரோகித், மேஜர் ரமேஷ் உபாத்யாயா, சமீர் குல்கர்னி, அஜய் ராஹிர்கர், ராகேஷ் தவ்டே, சுதாகர் திவேதி, சுதாகர் சதுர்வேதி, ராமச்சந்திர கல்சங்கரா, மற்றும் சந்தீப் டாங்கடே ஆகிய பத்து பேர் மீது UAPA, இந்திய தண்டனை சட்டம் மற்றும் வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ளது. இந்த வழக்கில் லோகேஷ் ஷர்மா மற்றும் தான் சிங் கைது செய்து குற்றம் சுமத்தப்படாதவர்கள் ஆவார்கள்.

பிரக்யா சிங் மீது குற்றம் சுமத்த எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று கூறிய NIA, குண்டு வெடிப்பிற்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் குடுவெடிப்பிற்கு வெகு நாட்கள் முன்னதாகவே ராம் சந்திர கல்சாங்ரா என்பவரிடம் இருந்தது என்று கூறியுள்ளது.

இந்த வழக்கு குறித்து NIA வின் டைரக்டர் ஜெனரல் சரத் குமார் கூறுகையில், இந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்யும் எந்த ஒரு முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறியுள்ளார். இந்த வழக்கில் NIA வின் திடீர் திருப்பம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு “எங்களது விசாரணை முடியும் வரை நங்கள் தீவிரவாத தடுப்பு பிரிவின் விசாரணை அடிப்படையில் இயங்கி வந்தோம், தற்பொழுது எங்கள் விசாரணை முடிந்ததும் எங்கள் அறிக்கையை சமர்ப்பித்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

இந்த குற்றப்பத்திரிகை அரசு வழக்கறிஞர் கீதா கோடம்பே வினால் சிறப்பு நீதிபதி எஸ்.டி.டேகாலே முன்னர் சமர்பிக்கப்பட்டது. இந்த வழக்கின் சிறப்பு அரசு வழக்கறிஞர் அவினாஷ் ரசல் தற்பொழுது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கை குறித்து தனக்கு எந்தவித அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை என்றும் இதனால் தான் மிகவும் வேதனைக்குள்ளானதாகவும் இந்த வழக்கில் இருந்து தான் விலகப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க: மாலேகான்

Comments are closed.