மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முன்னாள் இராணுவ அதிகாரிக்கு பிணை

0

இந்துத்வா தீவிரவாதிகள் நடத்திய மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக முன்னர் கைது செய்யப்பட்ட பலர் ஒருவர் பின் ஒருவராக அந்த வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தற்போது பாம்பே உயர் நீதிமன்றம் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ரமேஷ் உபாத்யாய் என்பவரை பிணையில் விடுவித்துள்ளது.

முன்னதாக இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கர்னல் புரோஹித்திற்கு பிணை வழங்கப்பட்டதை காரணம் காட்டி மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு முக்கிய குற்றவாளிகளான சுதாகர் சதுர்வேதி மற்றும் சுதாகார் திவேதி என்கிற தயானந்த் பாண்டே ஆகியோர் NIA சிறப்பு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். (பார்க்க செய்தி)

தற்போது இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டதை காரணம் காட்டி மேஜர் ரமேஷ் உபாத்யாய்க்கும் பிணை வழங்கி நீதிபதி ரஞ்சித் மூர் மற்றும் நீதிபதி சாதனா ஜாதவ் உத்தரவிட்டுள்ளனர்.

இவர்களின் இந்த உத்தரவிற்கு NIA தரப்பு வழக்கறிஞர் சந்தேஷ் படில் ஆட்சேபனை தெரிவித்த போதும், சமநிலை குறித்த உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் இவ்வழக்கில் தங்களது கைகளை கட்டிப்போட்டு விட்டது உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

இது குறித்த விசாரணையில் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் உபாத்யாயின் பங்கு கர்னல் புரோஹித்தின் பங்கை விட பெரிதானதா என்று கேள்வி எழுப்பியது. இதனை மறுத்த உபாத்யாய் தரப்பு வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் புரோஹிதிற்கு பிணை வழங்கியது என்றும் அத்துடன் சுதாகர் சதுர்வேதி மற்றும் சுதாகர் தர் திவேதி ஆகிய இருவரையும் பிணையில் விடுவித்துள்ளது என்றும் அதனால் உபாத்யாய்யிற்கும் பிணை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கூறினார்.

NIA தனது குற்றப் பத்திரிகையில் புரோஹித்திற்கு எதிரான முக்கிய ஆதாரமாக உபாத்யாய் மற்றும் புரோஹித் இடையேயான தொலைபேசி உரையாடலை குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.