மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுவிக்கக் தயாராகும் NIA

0

ஏழு பேர் கொல்லப்பட்ட 2008 மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள குற்றவாளிகளை சிறையில் வைக்க எந்த தேவையும் இல்லை என்று தேசிய புலனாய்வுத்துறை உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

நீதிபதி R.K.அகர்வால் மற்றும் A.M.சாப்ரி அடங்கிய பெஞ்ச் முன்பு NIA குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றங்கள் குறித்த வாதங்கள் நீதிமன்றத்தில் உள்ளதால் அவர்களை தொடர்ந்து காவலில் வைக்க தேவை ஏதும் இல்லை என்று கூறியுள்ளது. இதனையடுத்து இவ்வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டபப்ட்ட லெப்டினென்ட் கலோனல் ஸ்ரீகாந்த் புரோஹித் மற்றும் சுதாகர் தார் திவேதி  ஆகியோர் முன்னதாக தாங்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் நீண்ட காலம் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தை நாடி பிணை மனு வழங்கியிருந்தனர்.

இன்னும் உச்ச நீதிமன்றம் இந்த குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டபப்ட்ட சாத்வி பிரக்யா சிங் மற்றும் புரோஹித் ஆகியோரின் பிணை மனு குறித்து விரைவில் முடிவெடுக்குமாறு மகாராஷ்டிரா சிறப்பு நீதிமன்றத்திடம் கூறியிருந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் மேலும் சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ராகேஷ் டி.தாவ்டே தவிர பிற குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்க MCOCA சட்டம் கணக்கிடப்பட கூடாது என்றும் கூறியிருந்தது.

இவ்வழக்கில், ரமேஷ் சிவாஜி உபாத்யாய், சமீர் சரத் குல்கர்னி, அஜய் ரஹீர்கர், ராகேஷ் தாவ்டே, ஜகதீஷ் சிந்தாமன் மாஹட்ரே, பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித், சுதாகர் தார் திவேதி, சுதாகர் சதுர்ர்வேதி, ராமச்சந்திரா கல்சங்கரா (தேடப்பட்டு வருபவர்), சந்தீப் டாங்கே (தேடப்பட்டு வருபவர்) ஆகியோர் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழும், UAPA சட்டத்தின் கீழும், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்ய NIA ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

Comments are closed.