மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: அனைத்து குற்றவாளிகளும் MCOCA சட்டத்தில் இருந்து விடுவிப்பு

0

2008 மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக சாத்வி பிரக்யா சிங்,லெப்டினன்ட் கர்னல் புரோஹித் தவிர்த்து சுதாகர் திவேதி, ஓய்வு பெற்ற மேஜர் ரமேஷ் உபாத்யாய், சமீர் குல்கர்னி, சுதாகர் சதுர்வேதி மற்றும் அஜய் ராஹிர்கர் ஆகியோர் சிறப்பு NIA நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளனர்.

முன்னதாக இவர்கள் தங்களை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யக்கூறி அளித்த விண்ணப்பத்தை NIA சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது. ஆனால் இவர்கள் அனைவர் மீதும் பயன்படுத்தப்பட்ட கடுமையாக தீவிரவாத ஒழிப்பு சட்டமான MCOCA சட்டம் விழக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஷ்யாம் சாஹு, ஷிவ்னாராயன் கல்சங்கரா மற்றும் பிரவீன் டகல்கி ஆகியோர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் UAPA சட்டத்தின் பிரிவு 16(தீவிரவாத செயல்களில் ஈடுபடுதல்), பிரிவு 18(சதித்திட்டம் தீட்டுதல்) ஆகிய பிரிவுகளிலும் இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 120(b) (சதித்திட்டம் தீட்டியதர்கான தண்டனை), 302 (கொலை), 307 (கொலை முயற்சி), மற்றும் 326 (வேண்டுமென்றே பிறர்க்கு தீங்கு விளைவிப்பது) ஆகிய பிரிவுகளிலும் விசாரிக்கப்பட உள்ளனர்.

மேலும் இவர்கள் மீது முன்னர் பதிவு செய்யப்பட்ட UAPA சட்டப்பிரிவுகள் 17, (தீவிரவாத் இயக்கங்கள் அல்லது தீவிரவாத செயல்களுக்காக நிதியுதவி சேகரிப்பது) பிரிவு 20(தீவிரவாத இயக்கத்தின் உறுப்பினராக இருப்பது) மற்றும் பிரவு 23(தீவிரவாத இயக்கத்தில் உருப்பினராக உள்ள ஒருவருக்கு உதவுவது) ஆகிய அனைத்து பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக NIA சிறப்பு நீதிபதி S.D.தெகாலே கூறியுள்ளார்.

பிரக்யா சிங் மற்றும் புரோஹித் தவிர்த்து தற்போது இவ்வழக்கில் விசாரிக்கப்படுபவர்கள் சுதாகர் திவேதி, ஓய்வு பெற்ற மேஜர் ரமேஷ் உபாத்யாய், சமீர் குல்கர்னி, சுதாகர் சதுர்வேதி அம்ற்றும் அஜய் ராஹிர்கர் ஆவர். மேலும் இரண்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜக்தீஷ் ம்ஹாற்றே மற்றும் ராகேஷ் தாவ்டே ஆகியோர் ஆயுத சட்டத்தில் கீழ் மட்டுமே விசாரிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து குற்றம் சாட்டப்பட்டவர்களையும் வருகிற ஜனவரி 15 ஆம் தேதி நீதிமன்றம் முன்பு ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் 29 ஆம் தேதி நடைபெற்ற மாலேகான் குண்டு வெடிப்பில் ஆறு பேர் கொலை செய்யப்பட்டனர் பலர் படுகாயமடைந்தனர்.

Comments are closed.