மின்னணு வாக்கு எந்திரங்கள் இருந்தும் 3 மாநிலங்களில் வென்றார் ராகுல் காந்தி: பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா பேச்சு

0

மின்னணு வாக்கு எந்திரங்கள் இருந்தும் 3 மாநிலங்களில் வென்றார் ராகுல் காந்தி: பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா பேச்சு

பீகாரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா, பாஜக வின் தலைவர்கள் பலரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அப்போது, பாஜகவின் அத்வானி குழுவிற்கு தனது ஆதரவை தெரிவித்ததால் தான் தனக்கு மந்திரி பதவியை மோடி அரசு தரவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் கூறிய அவர், “அத்வானி எனது குரு, நண்பர், தத்துவவாதி மற்றும் வழிகாட்டி. எனது விஸ்வாஸம் கட்சியை விட நாட்டு மக்களுக்கானது. நான் 2014 தேர்தலில் இமாலய வெற்றி பெற்ற போதும் எனக்கு மந்திரி பதவி கொடுக்கப்படவில்லை. ஆனால் தொலைகாட்சி நடிகைக்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.” என்று சின்ஹா தெரிவித்துள்ளார்.

இன்னும், “நான் அமைச்சர் ஆகியிருந்தால் கூட எந்த ஒரு மாற்றமும் இருந்திருக்காது. இன்றைய தேதியில் யாருக்கும் எந்த அமைச்சரையும் தெரிவதில்லை.” என்று அவர் கூறியுள்ளார். கட்சியின் முக்கிய கொள்கை முடிவுகள் குறித்து தனது கருத்தை நரேந்திர மோடி கேட்காமல் தன்னை அமித்ஷாவை சென்று சந்திக்குமாறு அவர் கூறிவிட்டார் என்றும் சின்ஹா தெரிவித்துள்ளார்.

பாஜகவில் ஒரு தனிமனித வழிபாடு நடைபெறுகிறது, அங்கு ஒரு மனித நாடகமும் இரு மனித இராணுவமும் இயங்குகிறது. அமைச்சர்களுக்கு யாரும் செவிமடுப்பதில்லை. பிரதமர் அலுவலகமே அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது.” என்று அவர் தெரிவித்துள்ளார். கட்சியில் அத்வானி ஓரங்கட்டப் படுவது தனக்கு வேதனையளிக்கிறது என்று கூறிய அவர், அத்வானி அவரது கடின உழைப்பாலும் தியாகங்களினாலும் பாஜகவை பாதுகாத்து வளர்த்தவர் என்று சின்ஹா தெரிவித்துள்ளார்.

மின்னணு வாக்கு எந்திரங்கள் இருந்தும் மூன்று மாநிலங்கள் தேர்தலில் வெற்றியைப் பிடித்த ராகுல் காந்தியிடமிருந்து மற்ற கட்சி தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்என்றும் சின்ஹா தெரிவித்துள்ளார்.

பாஜக மீது இத்தனை குற்றச்சாட்டுகளை அடுக்கிய அவரிடம் பாஜகவுடனான அவரது நிலைப்பாடு குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, தான் கட்சியை விட்டு விலக போவதில்லை என்றும் வேண்டுமென்றால் கட்சி தன்னை நீக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.