மியானம்ரில் தாக்கப்படும் முஸ்லிம்கள் – 1000 வீடுகளுக்கு  மேல் தரைமட்டம்

0

முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் வடமேற்கு மியாமரில் ஏறத்தாள 1000 வீடுகளை மியான்மர் இராணுவம் தரைமட்டமாக்கியுள்ளதை மனித உரிமைக் கழகம் செயற்கைக்கோள் படத்தின் மூலம் கண்டறிந்துள்ளது.

கடந்த மாதம் மியாமாரின் பங்களாதேஷ் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள எல்லை காவல்துறை கண்காணிப்பு நிலையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து அங்கு மியான்மர் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி ரோஹிங்கியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியாகும்.

இங்கு நடைபெற்று வரும் வன்முறையால் ஏறத்தாள 30000 பேர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் பாதிக்கும் அதிகமானோர் மியான்மர் இராணுவம் ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடந்த்தியை தொடர்ந்து இரு தினங்களில் தங்களின் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள் என்று ஐ.நா மனித உரிமை கழகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆறு வாரங்களில் பாதுகாப்பு படையினர் இதுவரை 70 பேர்களை கொன்றும் ஏறத்தாள 400 பேரை கைதும் செய்துள்ளது என்று அந்நாட்டு பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. ஆனால் மனித உரிமை ஆர்வலர்கள் இதன் உண்மையான எண்ணிக்கை இதற்கு பன்மடங்கு அதிகம் என்று கூறியுள்ளனர்.

பல நேரடி சாட்சிகல் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், ரோஹிங்க்யா முஸ்லிம்கள் மியான்மர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டும், கற்பழிக்கப்பட்டும், அவர்களின் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டும், அவர்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டும் வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை முற்றிலுமாக மறுக்கும் மியான்மர் அரசு சர்வதேச பார்வையாளர்களை அப்பகுதிகளுக்கு சென்று விசாரணை செய்யவும் அனுமதி மறுத்து வருகிறது.

மியான்மாரில் தங்கள் மீது இராணுவத்தினரால் நடத்தப்படும் வன்முறைகளுக்கு அஞ்சி நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடான பங்களாதேஷில் அடைக்கலம் புக முயற்சித்து வருகின்றனர்.

அமைத்திகான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகீ தலைமையிலான மியான்மர் அரசோ மியான்மர் இராணுவம் மீது சுமத்தப்படும் இந்த குற்றங்கள் அனைத்தும் தீவிரவாதிகளால் பரப்பப்படும் போலி பிரச்சாரங்கள் என்று கூறிவருகிறது. ஆனால் அப்பகுதிகளில் உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் உதவிக்குழுக்களுக்கு களத்தில் உள்ள உண்மைகளை கண்டறிய பல கட்டுப்பாடுகள் வித்திக்கப்பட்டு வருகிறது. இருந்தும் அரசு மற்றும் இராணுவத்திற்கு எதிரான சாட்சிகள் குவிந்த வன்னம் உள்ளன.

கடந்த நவம்பர் 10 ஆம் தேதியில் இருந்து 18  ஆம் தேதி வரை ஐந்து ரோஹிங்கியா கிராமங்களில் ஏறத்தாள 820 கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் மனித உரிமைக் கழகம் கண்டறிந்துள்ளது. மொத்தமாக தங்களின் இந்த ஆய்வில்  1250 கட்டிடங்கள் இராணுவத்தினரால் தகர்க்கப்பட்டுள்ளதாக மனித உரிமைக் கழகம் தெரிவித்துள்ளது.

மியான்மாரின் இராணுவ ஆட்சியின் போது நடைபெற்றது போன்று தங்கள் மீது சுமத்தப்படும் குற்றங்களை வெறுமனே நிராகரிக்காமல் தற்போதைய அரசு நிகழ்வுகளை ஆராய வேண்டும் என்று மனித உரிமை கழகத்தின் ஆசிய இயக்குனர் பிராட் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

அரசு தரப்பில் இருந்து, வெறும் 300 வீடுகள் தீவிரவாதிகளால் அரச படைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மனக்கசப்பை உண்டுபண்ணுவதற்காக தகர்க்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. சூகீ ஆட்சி பொறுப்பேற்று ஏழு மாதங்களில் மியான்மரின் ராகைன் பகுதியில் அதிகரித்து வந்த வன்முறைகள் அவரின் ஆட்சிக்கு பெரும் சவாலாக திகழ்ந்தது.

கடந்த 2012 ஆம் ஆண்டு மியான்மரின் பெரும்பான்மை பெளத்தர்கள் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் அதிகாமானோர் உயிரிழந்தனர். பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றபப்பட்டு அகதிகள் முகாம்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.