மியான்மர் தேர்தலில் சூகியின் கட்சி வெற்றி

0

 

மியான்மார் நாட்டின் முதல் தேசிய அளவிலான பொதுத் தேர்தலில் ஆளும் USDP கட்சிக்கு எதிராக களமிறங்கினார் ஆங் சான் சூ கீ. இது வரை அறிவித்த தேர்தல் முடிவுகள் நிலவரப்படி மொத்தம் உள்ள 54 தொகுதிகளில் 49 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது ஆங் சான் சூ கீ யின் கட்சி. ஆளும் கட்சியான USDP கட்சி தங்கள் தோல்வியினை ஒப்புக்கொண்டுள்ளது.
சூ கீ யின் கட்சி மொத்த தொகுதிகளில் 90 சதவிகித தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மை கட்சியாக உருவெடுக்கும் என நம்பப்படுகிறது. தேர்தல் வெற்றி கொண்டாட்டங்கள் இப்பொழுதே தொடங்கிவிட்டன.
சூ கீ யின் வெற்றி மியான்மார் மக்களின் துயர் துடைப்பதாக இருக்கும் என நம்பப்படுகிறது, கடந்த 50 வருடங்களாக ராணுவ ஆட்சியில் சிக்கித் தவித்த மக்களுக்கு இது ஒரு நம்பிக்கை கீற்றாக அமைந்துள்ளது.

சூ கீ தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் மியான்மார் அரசியல் சாசனப்படி பாராளுமன்றத்தில் இராணுவத்தின் ஆதிக்கம் இருக்கவே செய்யும். உள்துறை, இராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு ஆகியவற்றிற்கான அமைச்சர்களை இராணுவமே தீர்மானிக்கும்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூ கீ மியான்மார் முஸ்லீம்கள் படுகொலை குறித்து மவுனம் சாதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது கட்சி ஆட்சி பொறுப்பேற்ற பின் மியான்மார் முஸ்லீம்களின் நிலை மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Comments are closed.