மியான்மாரில் பெளத்த மத குருக்கள் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்

0

மத்திய மியான்மாரில் இரு வீட்டார்களுக்கிடையேயான பிரச்னையை மத பிரச்சனையாக்கி அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் மீது பெளத்த மத குருக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதி முஸ்லிம்கள் காவல் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

2012 இல் இருந்து மியான்மரில் முஸ்லிம் எதிர்ப்பு கலவரங்களில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டும் அகதிகளாக்கப்பட்டும் இருந்தனர். ஐ.நா மத்தின உரிமை குழு உட்பட மியான்மார் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் மத வெறி தாக்குதல்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தது.
இந்நிலையில் கடந்த வியாழன் அன்று ஏறத்தாள 200 பெளத்த மதவாதிகள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய துயே மெய்ன் கிராமத்தை தாக்கி சூறையாடியுள்ளனர். அப்பகுதியில் உள்ள ஒரு பளிவாசல் சேதப்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் அடக்கஸ்தலத்தின் சுற்றுச் சுவரையும் கலவரக்காரர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து பெண்கள் குழந்தைகள் என சுமார் 70 பேர் அப்பகுதி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் 150 க்கும் மேற்ப்பட்டோர் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அப்பகுதி மக்கள் இது குறித்து கூறுகையில், தங்களை கொலை செய்து விடுவதாக பலர் மிரட்டி வருவதாகவும், அதனால் தலைமறைவாக உள்ளதாகவும் சிலர் கூறியுள்ளனர். இன்னும் சிலர் தங்களின் பாதுகாப்பிற்கு அஞ்சி வீடுகளை விட்டு வெளியேறாமல் இருந்து வருகின்றனர்.

Comments are closed.