மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ள சாக்க்ஷி மகாராஜ்,

0

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் உத்திர பிரதேச மாநிலத்தில், சர்ச்சைகளுக்கு பெயர்போன பா.ஜ.க. தலைவர் சாக்க்ஷி மகாராஜ், மீண்டும் தனது பேச்சால் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

முன்னதாக இந்திய நாட்டின் ஜனத்தொகை நான்கு மனைவி கொள்கைகளை ஆதரிப்பவர்களால் தான் அதிகரித்துள்ளது என்று கூறியிருந்தார் அவர். இதனை அடுத்து அவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

தனது அந்த பேச்சுக்கு விளக்கம் அளிகின்றேன் என்கிற பெயரில் தனது கருத்துக்கள் மூலம் புதிய சர்ச்சையை அவர் கிளப்பியுள்ளார். தற்போது, “நான் பெண்கள் எந்திரங்கள் இல்லை என்று கூறினேன். நான்கு மனைவிகள், 40  குழந்தைகள், மூன்று விவாகரத்து, இவை அனைத்தும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று அவர் கூறியுள்ளார். தனது இந்த கருத்தையும் அவர் சிறுபான்மை சமூகத்தினரை கொச்சைப் படுத்தும் விதமாகவே அவர் பேசியிருபப்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதே சாக்ஷி மஹாராஜ் இரண்டு வருடங்களுக்கு முன்னர், இந்து மதத்தை பாதுகாக்க இந்து பெண்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் நான்கு குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தகது.

சாக்ஷி மகாராஜ் குறித்த செய்திகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Comments are closed.