மீண்டும் பேசுவோம் கீழடியை!

0

மீண்டும் பேசுவோம் கீழடியை!

தமிழர்களின் சங்ககால வரலாற்று உண்மைகளை பறைசாட்டும் கீழடி அகழாய்வு உலகின் மூத்த நாகரிகம் தமிழர்களின் நாகரிகம் என்பதை பறைசாற்றியது. ஆரம்பத்தில் இருந்தே இந்த அகழாய்வுகளை காழ்ப்புணர்ச்சியோடு நோக்கி வரும் மத்திய பா.ஜ.க. அரசு இதற்கு பல முட்டுக்கட்டைகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

கடந்த 2014ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு நடத்த மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தது. இந்த அகழாய்வு பணியை மேற்கொள்ள தொல்லியல் துறை அதிகாரி இராமகிருஷ்ணன் நியமிக்கபட்டார். 2014 முதல் 2017 வரை இரண்டு கட்ட அகழாய்வுகளை இராமகிருஷ்ணன் மேற்கொண்டார். அந்த இரண்டு அகழாய்வுகளின் முடிவுகளில் இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தும் ஆச்சர்யமடையும் வகையில் சங்க கால தமிழர்களின் நகர வாழ்க்கை முறை மற்றும் சங்க கால நாகரிகத்தை பிரதிபலிக்கும் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பொருட்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், ஆயுதங்கள் என சுமார் 8000 ஆதாரங்கள் கிடைத்தன.

இராமகிருஷ்ணன் மேற்கொண்ட இந்த இரண்டு கட்ட அகழாய்வுகள் எளிதில் நடத்தப்பட்டவையல்ல. ஒவ்வொரு கட்ட அகழாய்வுகள் முடிவுக்கு வரும்போது மத்திய அரசு ஏதோவொரு தடையை ஏற்படுத்தியது. அடுத்தக்கட்ட அகழாய்வுக்கு அனுமதி அளிப்பதில் தாமதம் ஏற்படுத்துவது, நிதி ஒதுக்கீட்டில் தாமதம், அலைக்கழிப்பு, கிடைத்த ஆவணங்களை பாதுகாக்க முறையான வசதிகளை செய்துக் கொடுக்காமல் ஆவணங்களை சேதமடைய செய்ய முயற்சிப்பது என்று ஒவ்வொரு முறையும் புதிய புதிய தொந்தரவுகளை மத்திய அரசு கொடுத்து வந்தது. இதன் உட்சமாக அகழாய்வுகளை மேற்கொண்டு வந்த தொல்லியல் துறை அதிகாரி இராமகிருஷ்ணனை அஸ்ஸாமுக்கு பணியிட மாற்றம் செய்தது. கீழடி அகழாய்வுகளை நடத்த மத்திய அரசு விரும்பவில்லை என்பதை இது வெளிப்படையாக உணர்த்தியது. மேலும் அகழாய்வு பணியை மேற்கொள்ள அகழாய்வு துறையில் அனுபவமில்லாத அதிகாரியை இதற்கு நியமனமும் செய்தது மத்திய அரசு. இதுபோன்று மத்திய அரசு கீழடி அகழாய்வு பணி தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்படுத்தும் போதெல்லாம் தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தின. கீழடி குறித்து பொதுவெளியில் விவாதங்களை உண்டாக்கியது. ஆனால் தற்போது நிலை வேறு. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.